DMK: திமுக - வில் உட்கட்சி பூசல்...எம்.எல்.ஏ விடம் சால்வையை பிடிங்கி எரிந்த நிர்வாகி.. நடந்தது என்ன?
சென்னை மாதவரத்தில் திமுக எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகளுக்கிடையே கோஷ்ட்டி பூசல்..

புதியதாக வழங்கப்பட்ட இளைஞர் அணி பொறுப்பு
திமுக - வில் சென்னை வடகிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் , மாதவரம் ஆகிய தொகுதிகள் அடங்கிய பகுதிகளுக்கு இளைஞர் அணியில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பு பட்டியலானது இளைஞரணி மூலம் இளைஞரணி செயலாளர் மற்றும் மாநில துணை செயலாளர்களால் நேர்காணல் நடத்தப்பட்டவர்கள் எனவும், மாவட்ட , பகுதி செயலாளர்கள் மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஒரு பட்டியல் எனவும் கொடுத்து அதில் இறுதி செய்து பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனத்தின் கை ஓங்கவில்லை என்று தெரிகிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் சுதர்சனத்தை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். மாலை 4 மணிக்கு சென்றவர்களை 6 மணி வரை சுதர்சனம் பார்க்காமல் அலக் கழித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஒரு வழியாக பார்க்க ஆரம்பித்தவுடன் மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன் தனது பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுடன் சுதர்சனத்தை சந்தித்தார்.
அப்போது துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட புழல் நாராயணனின் மகன் வழக்கறிஞர் அஜய் தென்னவன் என்பவர் சுதர்சனமிடத்தில் வேட்டி கொடுத்து வாழ்த்து பெற்ற போது , நாராயணாவின் மகனை நாகரீகமாக வளர்த்து வை அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று சுதர்சனம் கூறியதாக சொல்லப்படுகிறது.
நாராயணன் அதற்கு , நாங்கள் வாழ்த்து பெற வந்துள்ளது உங்கள் வீட்டிற்கு. தேவையில்லாமல் எதற்கு அண்ணா இப்படி பேசுகிறீர்கள் நான் சரியாகத் தான் பிள்ளையை வளர்த்து வக்கீலாக ஆளாக்கி உள்ளேன் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்க ,
அதற்கு சுதர்சனம் உன் மகனின் யோக்கியதை எனக்கு தெரியும் ஒழுங்கா இருக்க சொல் என்று மிரட்ட , உடனடியாக அருகில் இருந்த அஜய் தென்னவன் சுதர்சனம் கையில் கொடுத்த வேட்டியை பிடுங்கி எரிந்துள்ளார்.
உடனடியாக சுதர்சனத்தின் பாதுகாவலராக இருந்த போலீஸ் , அஜய் தென்னவன் மார்பில் தாக்க அங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்து இளைஞர் அணியினர் ஒட்டு மொத்தமாக சுதர்சனம் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

