இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 12-வது முறையாக தோல்வி.. ஆஸ்திரேலியாவிடம் சரிந்த சோகம்..!
உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்று அந்நாட்டுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் கடைசி நிமிட கோலால் இந்திய அணி 4-5 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் ஹாக்கி போட்டில் அடிலெய்டில் நேற்று நடந்தது. போட்டி தொடங்கிய 3வது நிமிடத்திலேயே இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து ஆஸ்திரேலியா அணியை அதிர செய்தார். இதற்கு பழிவாங்க முயற்சிகள் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அதிரடி தாக்குதல் தொடுத்தனர். ஆஸ்திரேலியா அணி வீரர்களான பிளேக் மற்றும் ஜாக் வெல்ச் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்த, 3வது 15வது நிமிட ஆட்டநேர முடிவில் 3 - 4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது.
கடைசி கால் மணிநேரத்தில் விஸ்வரூம் எடுத்த கோவர்ஸ் ஹாட்ரிக் கோல் அடிக்க, ஆஸ்திரேலியா அணி 7- 4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆறுதலாக கடைசி 60வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார்.
ஆஸ்திரேலியா ஹாக்கி அணி சார்பில் கோவர்ஸ் 12வது, 27வது மற்றும் 53வது நிமிடங்களில் தனது 3 கோல்களை அடித்தார். வெல்ச் 17வது, 24வது நிமிடங்களில் 2 கோல்க , ஜேக் வெட்டன் (49), ஜேக்கப் ஆண்டர்சன் (48) தலா ஒரு கோல்களை பதிவு செய்தனர்.
Indian hockey team lose 4-7 to Australia in the second hockey Test match of the five-match series. India trail 0-2 to Australia.
— ANI (@ANI) November 27, 2022
இந்திய அணி சார்பில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல் (3வது, 60வது நிமிடம்), ஹர்திக் சிங் (25), முகமது ரஹீல் (36) தலா ஒரு கோல் அடித்திருந்தனர்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இருநாடுகள் விளையாடும் 3வது போட்டி வருகிற 30ம் தேதி நடக்க இருக்கிறது.
உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.