மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (12.08.2025): மயிலாடுதுறை மின் தடை: நாளை உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!

Mayiladuthurai Power Shutdown 12.08.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (12.08.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மணல்மேடு துணை மின்நிலையம் 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு துணை மின் நிலையத்தில் நாளைய தினம் 12.08.2025 செவ்வாய்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீர்காழி மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

 

எதிர்வரும் 12.08.2025 செவ்வாய்கிழமை அன்று மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்கண்ட மின்பாதைகளில் இருந்து மின் வினியோகம் பெறும் ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 

மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, திருச்சிற்றம்பலம், வரதம்பட்டு, நமச்சிவாயபுரம், ஆத்தூர், உச்சிதமங்கலம், பாண்டூர், வடவாஞ்சார் மற்றும் திருவாளப்புத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆடிப் பௌர்ணமியில் ஜொலித்த ஆக்கூர்! - நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை!
ஆடிப் பௌர்ணமியில் ஜொலித்த ஆக்கூர்! - நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை!
காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
காவிரியில் புனித நீராடி...அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget