Coolie: வசூல் வேட்டை நடத்தும் ரஜினிகாந்த்.. லியோவை முந்திய கூலி.. எத்தனை கோடி தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள கூலி படம் லியோ சாதனையை முறியடித்தது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரச்சிதா, செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். கடந்த வாரம் வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தில் இடம்பெற்ற சிக்கிட்டு, மோனிகா பாடல்கள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. மோனிகா பாடல் மூலம் பூஜா ஹெக்டேவிற்கும் ரசிகர்ள் போரதரவு அளித்துள்ளனர். படம் ரிலீஸ் ஆக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், முன்பதிவில் வார் 2 படத்தையும் தாண்டி கூலி திரைப்படம் சாதனை படைத்து வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடியாக புக்கிங் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடை தாண்டி பிற மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் முதல் 3 நாட்களுக்கு ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கூலி திரைப்படம் 1,000 கோடி அடிக்கும் என கூறி வரும் நிலையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படம் முன்பதிவில் ரூ.50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவில் விஜய் நடித்த லியோ படத்தை தாண்டி கூலி வசூல் சாதனை படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.





















