மேலும் அறிய

Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம் - கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம், அதுவும் நேரடியாக..

Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து கூடுதல் ரஃபேல் போர் விமானங்களை வாங்க, இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் போது நீண்ட தூர எல்லை தாண்டிய தாக்குதலில் ரஃபேல் போர் விமானம் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க திட்டம்:

இந்திய விமானப்படை கூடுதலாக புதிய ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அரசுகளுக்கு இடையேயான நேரடி ஒப்பந்தம் மூலம் ஃப்ரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யவும் விரும்புகிறதாம். அந்நாட்டுடனான  114 மல்டி-ரோல் ஃபைட்டர் ஏர்கிராஃப்ட் (MRFA) வாங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் ரஃபேல் போர் விமானங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலின் (DAC) தேவையை (AoN) ஒப்புக்கொள்ளும் முடிவுக்காக காத்திருக்கும் இந்த திட்டம், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம்

கூடுதல் ரஃபேல் விமானங்களுக்கான அழுத்தம் ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு அதிகரித்துள்ளதாம். அந்த ராணுவ நடவடிக்கையின் போது, நீண்ட தூர எல்லை தாண்டிய தாக்குதலில் ரஃபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின. அதேநேரம், சீனாவில் தயாரிக்கப்பட்ட j-10 போர் விமானங்களை PL-15 ஏவுகணைகளுடன் சேர்த்து பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதன் மூலமாக இந்தியாவின் 3 ரஃபேல் விமானங்கள் உட்பட 6 போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறினாலும், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குறையும் விமானப்படையின் வலிமை:

இந்திய விமானப்படையில் உள்ள ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கை ஏற்கனவே 31 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், கடைசியாக பயன்பாட்டில் உள்ள MiG-21 ஸ்குவாட்ரன்களும் அடுத்த மாதம் ஓய்வு பெற்றால், விமானப்படையில் உள்ள ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவில் 29 ஆக குறைய உள்ளது.  சீனா மற்றும் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான அங்கீகரிக்கப்பட்ட 42.5 படைப்பிரிவுகளை விட இந்திய விமானப்படை மிகவும் குறைவான போர் விமானங்களையே கொண்டுள்ளது.  பாகிஸ்தானுக்கு குறைந்தபட்சம் 40 J-35A ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்க சீனா தயாராகி வருவதால், கூடுதல் ரஃபேல் போர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

விமானப்படையை வலுப்படுத்த கோரிக்கை

ரஃபேல் போர் விமானக் குழுவை விரிவுபடுத்துவது புதிய உலகளாவிய டெண்டரை வெளியிடுவதை காட்டிலும் வேகமாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும் என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்தியா ஏற்கனவே அம்பாலா மற்றும் ஹசிமராவில் 36 ரஃபேல் விமானங்களை பயன்படுத்துகிறது. இரண்டும் தலா ஒரு கூடுதல் ஸ்குவாட்ரனை சேர்க்கும் திறன் கொண்டவை. கடற்படைக்கும் இதேபோன்ற தளம் தயாராகி வருகிறது. ஏப்ரல் மாதம் கையெழுத்தான ரூ.63,887 கோடி ஒப்பந்தத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டு முதல் 26 ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் விமானக் கப்பல் INS விக்ராந்தில் சேர உள்ளன.

2035 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு AMCA தயாராகும் வரை, ரஷ்யாவின் சுகோய்-57 அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35 போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் இரண்டு முதல் மூன்று படைப்பிரிவுகளை குறிவைத்துள்ள நிலையில், IAF இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவில்லை. இருப்பினும் வெகு விரைவிலேயே இந்த கொள்முதலுக்கான நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget