FIFA 2023: 16 வயதில் உலகக் கோப்பை போட்டியில் களம்.. புதிய சாதனையுடன் வலம் வரும் தென் கொரிய வீராங்கனை கேசி பேர்!
FIFA 2023 :16 வயது மற்றும் 26 நாட்களே ஆன இளம் வீராங்கனை கேசி பைர் களத்தில் இறங்கி சாதனை படைத்தார்
2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை 9 வது சீசன் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிரது. உலகக் கோப்பை என்றாலே ஏதேனும் ஒரு நாடு அந்த தொடரை எடுத்து நடத்தும். ஆனால் இந்த 2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளது. இதில் ஆஸ்திரேலியா ஆசிய கூட்டமைப்பிலும், நியூசிலாந்து ஓசியா கூட்டமைபிலும் அடங்கும். இந்த போட்டி 1988 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆண்கள் ஃபிஃபா உலக கோப்பை என்ன விதிமுறைகள் பின்பற்றினார்களோ அதே விதிமுறைகளை பின்பற்றியே இந்த 2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பைக்கும் நடக்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொலம்பியா- தென் கொரியா
ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன் தினம் நடந்த 16வது போட்டியில் கொலம்பிய அணியை தென் கொரியா அணி சிட்னி கால்பந்து ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடி கொலம்பியா அணி வீரர்கள் இரண்டு கோல்கள் அடித்து வெற்றிப்பெற்றனர். இதில், கொலம்பியா அணியே வெற்றிபெற்றாலும் கொரியா அணியில் விளையாடிய வீராங்கனை ஒருவரை பற்றிதான் கால்பந்து உலகமே பேசி வருகிறது. அவர்தான் 16 வயதே ஆன கேசிபர்.
16 வயது கேசி பேர்:
கொலம்பியாவுக்கு எதிரான தென் கொரியாவின் மகளிர் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தின் போது, கொரியா அணி வீராங்கனைகள் கோல் அடிக்க தடுமாறி வந்தனர் . ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் ஒரு வீரர் அணியில் இருந்து விலகினார். 16 வயது மற்றும் 26 நாட்களே ஆன இளம் வீராங்கனை கேசி பைர் களத்தில் இறங்கி, 17 நிமிடம் விளையாடிய அவர் கோல்களை அடிக்க முயற்சித்தும் அவரின் முயற்சி வீணாகியது. இதற்கு முன்னர் மறைந்த நைஜீரியாவின் இஃபேன்பி சியோஜினே 1990 உலகக் கோப்பை போட்டியில் 16 வயது 34 நாள்களில் விளையாடியதே சாதனையாக இருந்தது. தற்போது மிக குறைந்த வயதில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஆனார் கேசி பேர்.
பயிற்சியாளர் கொலின் பெல் கூறியது
தென்கொரியாவின் தலைமை பயிற்சியாளர் கொலின் பெல் கேசி பைரை பற்றி கூறுகையில், "கேசி பைருக்கு 16 வயதே ஆனாலும், அவர் விளையாடுவதற்கு எல்லா விதத்திலும் தகுதியானவர், எல்லோரையும் போலவே அவளும் நன்றாகப் பயிற்சி எடுத்தார். தற்போது அனுபவம் என்ற பயிற்சியை நான் அவருக்கு கொடுக்க நினைத்தேன். அதற்காக தான் கேசி பைர் களத்தில் விளையாட அனுப்பினேன்” என்று கூறியுள்ளார்.