Virat Kohli : இந்தியாவை விட்டு வெளியேறும் கோலி! புது வீடும் ரெடி.. எங்கே தெரியுமா?
Virat Kohli Leaving India:இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி குடும்பத்துடன் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. தற்போது கோலி குறித்து ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஒரு அறிக்கையின்படி, விராட் விரைவில் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடி பெயரவுள்ளார் என்று கூறப்பட்டு வந்தது, இதை அவரது குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார். கோலி இந்தியாவை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருகிறார் என்று கூறியுள்ளார்.
கோஹ்லியும் அனுஷ்காவும் லண்டனுக்கு மாறுவார்கள் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் முதன்முறையாக கோஹ்லி பற்றி ஒருவர் கூறியுள்ளார். பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா சமீபத்தில் டைனிக் ஜாக்ரனுக்கு பேட்டி அளித்தார். இதன்படி, "குழந்தைகள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் லண்டனுக்கு மாற விராட் திட்டமிட்டுள்ளார்" என்று கூறினார்.
கோஹ்லியின் புதிய வீடு எங்கே இருக்கும்?
விராட் கோலிக்கு டெல்லியில் வீடு உள்ளது. மும்பையிலும் அவருக்கு வீடு உள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் கோலி வாங்கி இருந்தார். இதனுடன் அலிபாக்கில் ஒரு பங்களாவும் வாங்கப்பட்டது. விடுமுறைக்காக இந்த வீட்டைக் கட்டினார் கோலி. ஆனால் தற்போது இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர் ஏன்றும் விராட் கோலியின் புதிய வீடு லண்டனில் இருக்கும். ஆனால் இது குறித்து விராட் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: Indian Cricketers as Youtubers: நாங்களும் யூடியுபர்ஸ் தான்! யூடியுபில் கலக்கும் கிரிக்கெட்டர்கள்.. எவ்வளவு subscribers தெரியுமா?
கோலியின் வீட்டின் மதிப்பு எவ்வளவு ?
விராட் கோலி தனது விலையுயர்ந்த வாழ்க்கை முறையால் செய்திகளில் உள்ளார். கோலிக்கு சொந்தமான அனைத்து வீடுகளும் விலை உயர்ந்தவை. கோஹ்லியின் மிக விலையுயர்ந்த பங்களா குருகிராமில் உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கோலியின் இந்த வீடானது டிஎல்எஃப் 1 ஆம் கட்டத்தில் உள்ளது, இதன் மதிப்பு ரூ.80 கோடி. மும்பை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் விலை சுமார் 34 கோடி ரூபாய். அலிபாக் பங்களாவின் விலை சுமார் 19 கோடி ரூபாய். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை
கோலி ஃபிட்டாக இருக்கிறார்:
கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் வேளையில், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விராட் கோலியின் ஓய்வு பல வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து ராஜ்குமார் சர்மா கூறுகையில், 'விராட் இன்னும் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார், ஓய்வு பற்றி யோசிக்க வேண்டிய வயதில் இல்லை என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: Ruturaj Gaikwad : பத்த வச்சிட்டியே ருது! RCB-ஐ கலாய்த்த சிஎஸ்கே கேப்டன்.. அடுத்த சீசன் சம்பவம் இருக்கு!