Rohit Sharma: ஆரம்பம் முதலே காயத்துடன் அதிரடி... ரோகித் சர்மாவின் போராட்டம் வீண்.. விடாமல் கொண்டாடும் ரசிகர்கள்!
இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், 7 வது விக்கெட்டுக்கு களமிறங்கி இந்திய அணியை வெற்றிபெற செய்ய போராடினார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், 7 வது விக்கெட்டுக்கு களமிறங்கி இந்திய அணியை வெற்றிபெற செய்ய போராடினார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்கதேச அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது.
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து இந்திய அணி தொடரை இழந்தாலும், கடைசிவரை காயத்துடன் வெற்றிக்காக போராடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா அனைவரது இதயங்களையும் வென்றார்.
ரோகித் காயம்:
போட்டியின் 2வது ஓவரை வீசிய முகமது சிராஜின் பந்தை எதிர் கொண்ட அனுமல் அடித்த பந்து, செகண்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் சென்றது. பந்தை பிடிக்க முயன்ற ரோகித்துக்கு காயம் ஏற்படவே, மைதானத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின் தன்மை அதிகமாக இருக்கவே அவர் தற்போது மருத்துவமனைக்குச் சென்றார். இவருக்கு பதிலாக மாற்று வீரராக ராஜத் படிதார் களமிறங்கினார்.
மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோகித்துக்கு சிகிச்சையின் போது காயமடைந்த பகுதியில் பல தையல்கள் போடப்பட்டன. இதையடுத்து, 7 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது.
41 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இதையடுத்து வேறு வழியில்லாததால் கையில் காயம் ஏற்பட்ட ரோகித் சர்மா, 9 வது வீரராக களமிறங்கினார். அதிரடியாக விளையாடினால் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெறும் என்ற மனநிலையில் களமிறங்கிய ரோகித், ஆரம்பம் முதலே காயத்துடன் அதிரடிகாட்ட தொடங்கினார்.
43வது ஓவரில் 207/7 என்ற நிலையில் இந்தியா போராடி வந்த அவர், மறுமுனையில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து நொறுக்கத் தொடங்கினார். கடைசி ஓவரில், இந்தியாவுக்கு 6 பந்துகளில் 20 ரன்கள் தேவை, கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது, ரோஹித் அதை கடைசி பந்தில் 6 ரன்களுக்கு கொண்டு வந்தார். ஆனால் கடைசி பந்தில் வங்கதேச வேகபந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அற்புதமான யார்க்கர் லெந்த் பந்து வீச, வங்கதேசம் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
Injured Rohit Sharma giving his best likepic.twitter.com/6laOEFQ2jc
— Sagar (@sagarcasm) December 7, 2022
இதையடுத்து, இணையத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் ரோகித் சர்மாவை கொண்டாடி வருகின்றனர்.