Praveen Chitravel Win Silver: ஆசிய சாம்பின்ஷிப்பில் வெள்ளி வென்று அசத்திய தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல்..!
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய தடகள தொடரில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கஜகஸ்தான் நாட்டில் ஆசிய உள்விளையாட்டு சாம்பின்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரவேல் பங்கேற்றார். இவர் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். பிரவீன் இந்த போட்டியில் 16.98 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
Medal Alert 🚨:
Praveen Chitravel wins Silver medal in Triple Jump event at Asian Indoor Championships in Kazakhstan.
➡️ Praveen did it in style creating New Indoor National record with best effort of 16.98m. pic.twitter.com/JkKIcLx3fL— India_AllSports (@India_AllSports) February 10, 2023
இந்திய அளவில் பிரவீன் சித்திரவேல் தாண்டியுள்ள 16.98 மீட்டர் தேசிய அளவில் ட்ரிபிள் ஜம்ப் நீளம் தாண்டுதலில் புதிய சாதனை ஆகும், வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் சித்திரவேலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: IND vs AUS 1st Test: மிரட்டிய ரோகித்.. அசத்திய ஜடேஜா, அக்ஷர்..! 300 ரன்களை கடந்த இந்தியா- ஆஸி.க்கு நெருக்கடி?
மேலும் படிக்க: Rishabh Pant Photo: "வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" கம்பேக்கிற்கு தயாராகும் ரிஷப்பண்ட்..!

