(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AUS 1st Test: மிரட்டிய ரோகித்.. அசத்திய ஜடேஜா, அக்ஷர்..! 300 ரன்களை கடந்த இந்தியா- ஆஸி.க்கு நெருக்கடி?
IND vs AUS 1st Test Day 2 Highlights: நாக்பூரில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Border Gavaskar Trophy 2023: நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் இடது கை பேட்ஸ் மேன்களான ரவீந்திர ஜடேஜாவும்(66) அக்ஷர் பட்டேலும்(52) அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மர்பி சுழலில் சிக்கி, அஸ்வின், புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், மறுமுனையில் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம், ரோகித் சர்மா 171 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 14 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். இவரும் 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஸ்ரீகர் பரத் களமிறங்க, அவரும் மர்ஃபி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனது அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை மார்ஃபி படைத்தார். மேலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பையும் மர்ஃபி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அக்ஷர் பட்டேல், ஏற்கனவே களத்தில் நிதானமாக ஆடிக் கொண்டு இருந்த ஜடேஜாவுடன் கை கோர்த்தார். இருவரும் தொடர்ந்து நிதானமாக ஆடிவந்தாலும், அவ்வப்போது தவறான ஷாட்டுகளை அடித்தனர். இதனால் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்தி அரைசதம் கடந்தனர்.
இரண்டாவது நாளான இன்று மட்டும் இந்திய அணி 6 வெக்கெட்டுகளை இழந்து, 244 ரன்களை எடுத்துள்ளது. இதில் நான்கு விக்கெட்டுகள் மர்ஃபி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.