மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து கோயில் கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்துவித மராமத்து பணிகள் தொடங்கவுள்ளது.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
#madurai | மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
— arunchinna (@arunreporter92) September 4, 2023
Further reports to follow - @abpnadu @SRajaJourno | @k_for_krish | @LPRABHAKARANPR3 | @Vinoth05503970 | @Deepu45342616 | @abplive | #மதுரை |.. pic.twitter.com/rOY9EeIbpp