பெங்களூரு மாணவிக்கு ஆபாச மெசேஜ்!நடிகர்தர்ஷன் கொலை வழக்கு பாணியில்.. இளைஞரை கடத்தி தாக்குதல்..
கோபமடைந்த குஷால், அப்பெண்ணுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பி அவளை துன்புறுத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பியதாக மாணவர் ஒருவரை கும்பல் ஒன்று தாக்கி சித்தரவதை சம்பவம் பரபபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
காதலால் உருவான பிரச்னை:
இந்த் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 வயதான குஷால், பெண் ஒருவரரை காதலித்து வந்ததாகவும் பின்னர் அந்த பெண் அவருடன் பிரிந்து தற்போது வேறொரு பையனை காதலித்து வந்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த குஷால், அப்பெண்ணுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பி அவளை துன்புறுத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது தோழியிடம் இதை கூற, அவர் குஷலை அழைத்து பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.
மர்ம கும்பல் தாக்குதல்:
இருப்பினும், அவர் வந்தபோது, எட்டு மாணவர்கள் உட்பட ஒன்பது இளைஞர்கள் கொண்ட ஒரு குழு அவரைக் கடத்திச் சென்று, தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர் ஆடைகளை களையுமாறு கட்டாயப்படுத்தி, அந்த கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் தனது மொபைல் போனில் தாக்குதலைப் பதிவு செய்தார்.
ரேணுகாசாமி கொலை வழக்கு
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், இந்த வழக்கு ரேணுகாசாமி கொலை வழக்கைப் போன்றது என்று கூறி, பாதிக்கப்பட்டவரின் முன் கேமராவை எடுத்து, அவரை ரேணுகாசாமி என்றும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்றும் அறிமுகப்படுத்தி தாக்குதல் நடத்துகின்றனர்இந்த தாக்குதல் சம்பவத்தில் குஷால் பலத்த காயமடைந்தார்.
தர்ஷன் வழக்கு:
சென்ற ஜூன் 11, 2024 அன்று, கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழியான பவித்ரா கவுடா, அவர்களது கூட்டாளிகளுடன், இன்ஸ்டாகிராமில் திருமதி கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதற்காக ரேணுகாசாமியைக் கடத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். ரேணுகாசாமி நடிகர் தர்ஷனின் ரசிகர் ஆவார். அவர் சித்ரதுர்காவில் உள்ள ஒரு மருந்துக் கடையில் பணிபுரிந்த நிலையில் ஜூன் 8, 2024 அன்று பெங்களூருவில் உள்ள பட்டந்தூர் அக்ரஹாராவில் உள்ள ஒரு கொட்டகையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் நடிகர் தர்ஷன் தற்போது சிறையில் உள்ளார்.
புகாரளித்த குஷால்:
இந்த வழக்கில், குஷால் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்குதல் நடத்தி, சித்திரவதை செய்து, விடுவித்தனர். பின்னர் அவர் சோலதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் போலீசார் ஹேமந்த், யஷ்வந்த், சிவசங்கர், ஷஷாங்க் கவுடா மற்றும் நான்கு மாணவர்களையும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சல்மானையும் கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல், தாக்குதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.























