கரூர் கல்யாண வெங்கட்ராம சுவாமி ஆலயத்தில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்
ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர், தெப்ப திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி கருட வாகனம், வெள்ளி கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருவார்.
அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு ஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இதன் முக்கிய நிகழ்வாக இன்று ஆலயக்கொடி மரத்தில் கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதியபடி சக்கரத்தாழ்வார் ஆலய வளம் பிறகு மேள தாளங்கள் முழங்க கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு சந்தன பொட்டிட்டு, பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் பட்டாச்சாரியார்கள் ஒன்று கூடி கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், மஞ்சள், துளசி உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.
அதன் தொடர்ச்சியாக கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய வாசலில் திருதேர்க்கு தேவையான பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து திருத்தேர் பராமரிப்பு பணியும், பாதுகாப்பு பணியும் ஆலய நிர்வாகிகள் சார்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி கருட வாகனம், வெள்ளி கருட வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், கஜலட்சுமி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் இன்று (நேற்று) முதல் இரவு திருவீதி உலா காட்சி தருகிறார். மேலும் வருகின்ற 24.02.2024 சனிக்கிழமை காலை 08.15 முதல் 08.45 மணிக்குள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து அன்று மாலை சுவாமி வண்டி கால் நிகழ்ச்சியும் நடைபெறும்.
பின்னர் வருகின்ற 26.02.2024 திங்கட்கிழமை மாலை 06:30 மணிக்குள் ஆலையம் அருகே உள்ள தெப்பத்தில் சுவாமி எழுதருளி தொடர்ச்சியாக மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுவார். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தற்போது ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.