IND Vs ENG : ஜோ ரூட் குறி வைக்கும் அந்த 3 இடம்.. சச்சின் சாதனையை முறியடிப்பாரா?
இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாகக் முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக ஜொலிக்கும் ஜோ ரூட் இந்த டெஸ்ட் தொடரில் சச்சின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை எந்தமாதிரியான சாதனை என்பதை இங்கு காணலாம்.
விராட் கோலி முதலிடம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அதிக அரை சதம் மற்றும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் சச்சினும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து ஜோ ரூட் 3ஆவது இடத்தில் உள்ளார். இவர் இந்திய அணிக்கு எதிராக 15 அரை சதங்கள் 13 சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி 32 ( சதம் மற்றும் அரைசதம்) அடித்துள்ளார். இன்னும் 5 அரை சதங்கள் அடித்தால் ஜோ ரூட் விராட் கோலியை சமன் செய்வார்.
சச்சினை நெருங்குவாரா ஜோ ரூட்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரராக சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 16 அரை சதங்களை அடித்துள்ளார். அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 13 அரை சதங்களுடன் இருக்கிறார். ஜோ ரூட் தற்போது 11 அரை சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இன்னும் மூன்று அரை சதங்கள் அடித்தால் சச்சினின் சாதனையை முறியடித்துவிடுவார். ஐந்து அரைசதங்களை அடித்தால் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது.
முதலிடம் யாருக்கு?
குறிப்பாக சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கும் வீரர்களின் பட்டியலில் ஜோ ரூட்டும் இடம்பிடித்துள்ளார். இவர் உலகளவில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரரான விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். அவர் 4036 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 3990 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜோ ரூட் தற்போது 3858 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இன்னும் 133 ரன்கள் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். 179 ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கலாம்.





















