ADGP Jayaram: ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
வழக்கு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அதில் ஏடிஜிபி வழக்கு விசாரணை நடந்து வருவதால், இடை நீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு வாதிட்டது.

சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், ஏடிஜிபியின் இடை நீக்கத்தைத் திரும்பப் பெற முடியாது என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரம் ஒன்றில், மைனர் சிறுவன் கடத்தப்பட்ட நிகழ்வில் ஏடிஜிபி ஜெயராம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தமிழக காவல் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் உஜ்ஜால் புயான் மற்றும் மன்மோகன் அடங்கி அமர்வு விசாரித்து வருகிறது. முன்னதாக நேற்று, சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறுவது குறித்து அரசின் ஆலோசனை பெற்றுத் தெரிவிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை நாளை (இன்று) விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
இடை நீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை
தொடர்ந்து வழக்கு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அதில் ஏடிஜிபி வழக்கு விசாரணை நடந்து வருவதால், இடை நீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு வாதிட்டது. மேலும் ஏடிஜிபி இடை நீக்கம் செய்யப்பட்டதன் ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
சிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்ற பரிந்துரை
இதற்கிடையே ஏடிஜிபி ஜெயராமை தமிழக அரசின் சிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்றவும் நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். அதேபோல உயர் நீதிமன்றத்தில் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு பட்டியலிட உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அனல் பறந்த விவாதம்
வழக்கை விசாரித்த நீதிபதி புயான், அதற்குப் பிறகு என்ன ஆனது? இன்னும் அவர் இடை நீக்கத்தில்தான் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு வழக்கறிஞர் சித்தார்த்தா: விசாரணை முடியும் வரை, அவர் இடை நீக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்று விதிகள் சொல்கின்றன.
நீதிபதி புயான்: நேற்று அவர் கைது செய்யப்படவில்லை என்றீர்கள், பிறகு ஏன் அவரை சஸ்பெண்ட் செய்து வைத்திருக்கிறீர்கள்?
வழக்கறிஞர் சித்தார்த்தா: (இடைநீக்கம் தொடர்பான விதிகளை வாசித்தார்) உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக அவர் இடை நீக்கம் செய்யப்படவில்லை.
நீதிபதி புயான்: இதை சிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்றுவது சரியாக இருக்குமா? இந்த வழக்கை பிற நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றலாம்.
இவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து விவாதம் நடந்து வருகிறது.






















