Johnny Depp: திடீரென மருத்துவமனைக்குள் என்ட்ரி தந்த ஜாக் ஸ்பேரோ.. சிரித்து மகிழ்ந்த குழந்தைகள்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் கடற்கொள்ளையனான ஜாக் ஸ்பேரோ உடையில் வந்து சர்ப்ரைஸ் தந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். 2003ல் வெளியான தி பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் இடம்பெற்ற ஜாக் ஸ்பேரோ கதாப்பாத்திரம் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். இதில் அவரது கதாப்பாத்திரம் மட்டும் அல்ல கடற்கொள்ளையனாக நீண்ட தலைமுடி, வசீகரிக்கும் பேச்சால் மக்களை கவர்ந்தார் ஜானி டெப். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மறக்க முடியாத ஜாக் ஸ்பேரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சினிமா பயணம்
தனது சிறு வயது முதலே இசைக்கலைஞனாக வேண்டும் என்பதே ஜானி டெப்பின் வாழ்நாள் ஆசையாக இருந்திருக்கிறது. இதற்கென்று முறையாக இசை பயிற்சி மேற்கொண்டு தனது பெயரிலேயே சிறிய இசை பாண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார். இளம் வயது திருமணம் என வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த ஜானி டெப் ஹாலிவுட் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். ஜானி டெ்பபின் கரியரில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது தி பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன். கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் சார்லீயும் சாக்லேட் ஃபாக்டரியும் , ஃபேண்டாஸ்டிக் பீஸ்ட் போன்ற படங்களின் மூலம் கமர்ஷியல் ஹீரோ என தன்னை நிரூபித்துக்கொண்டார்.
முன்னாள் மனைவி புகார்
ஜானியின் முதல் மனைவி லோரி அன்னி அல்லிசன். 1983 ஆம் ஆண்டு இவரை திருமணம் செய்த ஜானி டெப், இரண்டே வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த திருமணமும் இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். விவாகரத்திற்கு பிறகு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில, ஜானி தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்பெர் ஹெர்ட் கொடுத்த புகாரால் ஜானி டெப் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் தொடரில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவரது சினிமா கரியரும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.
வெற்றி
மிக கடினமான சூழலில் வாழ்வை கடத்தி வந்த ஜானி தனது முன்னாள் மனைவி கொடுத்த புகார் பொய்யானது என்றும் தனது புகழை கெடுக்கும் விதமாக பேசியிருப்பதாக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். 2 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கில் ஜானிக்கு சாதகமாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு மூலம் தான் கலங்கமற்றவன் என நிரூபித்து காட்டியதோடு, அவதூறு பரப்பிய தனது முன்னாள் மனைவியிடம் இருந்தும் 116 கோடி ரூபாய் இழப்பீடும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக வந்த ஜானி
தற்போது ஜானி டெப் டே ட்ரிங்கர் என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஜானி பிரபலமான கடற்கொள்ளையனான ஜாக் ஸ்பேரோ கெட்டப்பில் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வார்டுக்கு ஜாக் ஸ்பேரோ உடையணிந்து சென்ற ஜானியை பார்த்ததும் குழந்தைகள் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர். இதைக் கண்டு மருத்துவர்களும் நெகிழ்ச்சியடைந்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோவையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
🏥 El capitán Jack Sparrow ha visitado el Hospital Infantil Niño Jesús
— Salud Madrid (@SaludMadrid) June 18, 2025
😉 pic.twitter.com/D1TzPepmdm





















