'என்பீல்டு பைக் ரசிகர்களா நீங்கள் ?' அப்போ இது உங்களுக்காகதான்..!
கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இன்னும் வழங்கப்படும் மிலிட்டரி வேரியண்ட் ரூ. 1.75 லட்சம் விலையில் கிடைக்கிறது. இதன் விலையும் ரூ. 2,000 அதிகமாகும் என்கிறார்கள்.

இது நம்ம கிட்ட இருந்தா செம கெத்துதான் என்று நினைப்பவர்களின் மனதில் தோன்றும் ஒரே மாடல் ராயல் என்பீல்டு நிறுவன புல்லட்டுகள் தான். இப்போ சற்றே விலை உயர்த்த இருக்காங்களாம். எவ்வளவு விலை உயர்த்தினாலும்... இதுதான் நமக்கு சூப்பர் ஸ்டாரு என்கிறார்கள் புல்லட் பிரியர்கள்.
2023ம் ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மாடலில் அதிகப்படியான மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிநவீன J-சீரிஸ் தளத்திற்கு மாறியது. இதன் மூலம் புல்லட் 350 மாடல் ஏற்கனவே இதே தளத்தில் உருவாக்கப்பட்ட மீடியோர் 350, கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 போன்றவற்றுடன் இணைந்தது.
அறிமுகமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது என்ற தகவல்தான் புல்லட் பிரியர்களுக்கு ஷாக்கிங் கொடுத்துள்ளது. புல்லட் குடும்பத்தின் என்ட்ரி லெவல் மாடலாக பட்டாலியன் பிளாக் வேரியண்ட் இருக்கிறது. இதன் விலை ரூ. 1.75 லட்சம் ஆகும். தற்போதைய விலை உயர்வில் இந்த மாடலின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இன்னும் வழங்கப்படும் மிலிட்டரி வேரியண்ட் ரூ. 1.75 லட்சம் விலையில் கிடைக்கிறது. இதன் விலையும் ரூ. 2,000 அதிகமாகும் என்கிறார்கள். கருப்பு மற்றும் மெரூன் நிறங்களில் கிடைக்கும் நிலையான வேரியண்டின் விலை இப்போது ரூ. 2 லட்சம் ஆகும். இதையும் ரூ. 3,000 அதிகரித்து உள்ளது. ஃபிளாக் சிப் பிளாக் கோல்ட் வெர்ஷனும் ஓரளவு உயர்ந்து ரூ. 2,000 அதிகரித்து ரூ. 2.18 லட்சமாக உள்ளது. ராயல் என்பீல்ட் மிலிட்டரி சில்வர் வேரியண்டையும் சிறிது காலத்திற்கு அறிமுகப்படுத்தியது,
ஆனால் அது பின்னர் நிறுத்தப்பட்டது.வேரியண்ட் கலரை சிறிது மாறி, விலைகள் தற்போது ரூ. 2,000 முதல் அதிகபட்சம் ரூ. 3,000 வரை உயர்ந்துள்ள நிலையில், புல்லட் 350 மெக்கானிக்கல் அம்சங்கள் ஒரே மாதிரியாகவே உள்ளது. அது என்னன்னு பார்ப்போம்.
இது 20.2 hp பவர், 27 Nm டார்க் வெளிப்படுத்தும் 349cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது.இருப்பினும், இந்த மாடலில் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. ராயல் என்பீல்ட், புல்லட் உட்பட முழு 350சிசி மாடல்கள் மற்றும் சமீபத்தில் 2025 ஹண்டர் 350-இல் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல், குறிப்பாக நகர போக்குவரத்தில் சவாரி அனுபவத்தை மேம்படுத்த உதவும்.
எங்களுக்கு ராயல் என்பீல்டுதான் சாய்ஸ் அப்படின்னு நினைப்பவர்களுக்கு இந்த விலை உயர்வு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செஞ்சா வர்ற சவுண்டை அப்படியே உள்ளுக்குள்ள கிரகிச்சுக்கிட்டு புல்லட்டை ஓட்டிப் பாருங்க. நீங்கதான் ஹீரோ என்று மெய்சிலிர்த்து சொல்கிறார்கள் ராயல் என்பீல்ட் நிறுவன தயாரிப்புகளை விரும்பி நேசிக்கும் யூத். அட்ரா சிட்டி எல்லாம் காட்டவே வேண்டாம் சார். கம்பீரமாக வேட்டி, சட்டை கட்டிக்கிட்டு இந்த புல்லட்டுல போனாலே தனி மரியாதைதான் என்று காலரை உயர்த்தும் யூத்-கள் அனைவரின் விருப்பமும் ராயல் என்பீல்ட்தான் போங்க.




















