School Girl Plate Washing | பாத்திரம் கழுவும் மாணவிகள்! அரசு பள்ளியில் அவலம்! ஆக்ஷனில் அன்பில்மகேஷ்
தலைமை ஆசிரியரின் உணவுப்பாத்திரத்தை மாணவிகள் கழுவும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை, 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் என்ற ஆசிரியர் பணிபுரிகிறார். அவருடன் 10 ஆசிரியர்களும் பணி புரிகின்றனர்.
இந்த நிலையில் தான் தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரின் உணவு பாத்திரம் மற்றும் பள்ளி திண்ணையை மாணவ மாணவிகள் கழுவும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினாரும் கண்டனம் தெரிவித்தனார்.
இச்சூழலில் , இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கபட்டதாக காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது மாணவர்கள் மற்றும் மாணவிகளை உணப்பாத்திரத்தை கழுவ சொன்ன தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















