விஜய் டிவி சீரியல் நடிகருக்கு குவா... குவா..! நடிகர் அவினாஷ் - தெரேசா ஜோடிக்கு குவியும் வாழ்த்து!
பிரபல சீரியல் நடிகர் அவினாஷின் காதல் மனைவி, கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

டான்ஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய கேரியரை சின்ன திரையில் துவங்கியவர் அவினாஷ். சன் டிவியில் ஒளிபரப்பான, 'தில்லானா தில்லானா' டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்... இதைத் தொடர்ந்து 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையால் பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.
சிறுவயதில் இருந்தே நடனம் மற்றும் நடிப்பில் அவினாஷுக்கு ஆர்வம் இருந்த நிலையில், பெற்றோரும் அவருடைய ஆசைக்கு சப்போர்ட் செய்தாலும், முதலில் படிப்பு, அதன் பின்னரே நடிப்பு மற்றும் டான்ஸ் என்பதில் உறுதியாக இருந்தனர்.
பெற்றோரின் ஆசைப்படி தன்னுடைய படிப்பை முடித்த பின்னர், தொடர்ந்து டான்ஸ் நிகழ்ச்சிகளில் ஒருபுறம் ஆர்வம் காட்ட துவங்கிய அவினாஷ், இதை தொடர்ந்து சன் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ரேவதி மற்றும் தலைவாசல் விஜய் நடிப்பில் வெளியான, 'அழகு' சீரியலில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார்.
பின்னர் அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க துவங்கினார் அவினாஷ். குறிப்பாக கயல் சீரியலில் சைத்ரா ரெட்டியின் தம்பியாக நடித்திருந்தார். அவினாஷ் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இந்த சீரியலில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் நடித்தார். அடுத்ததாக விரைவில் விஜய் டிவியில் துவங்க உள்ள சீரியலிலும் நடிக்க உள்ளார்.
அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், தன்னுடைய 13 வருட காதலியான பள்ளி தோழி தெரேசா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.
சமீபத்தில் தெரேசா கர்ப்பமாக இருக்கும் தகவலை அவினாஷ் மனைவியின் புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில், சமீபத்தில் தான் தரேசாவுக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடந்தது. இதில் நடிகை ரம்பா, அம்பிகா, போன்ற வெள்ளித்திரை நடிகைகள் மட்டும் இன்றி பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தற்போது அவினாஷ் - தெரேசா ஜோடிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.





















