மேலும் அறிய
Arudra Darshan 2023 : வெகு விமரிசையாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா!
Arudra Darshan 2023 : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருத்தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா
1/7

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்ட திருவிழா காலை தொடங்கியது.
2/7

விநாயகர் தேர் வீதியுலா தொடங்கியதை தொடர்ந்து முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து சுவாமிகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.
3/7

தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்காணோர் தேர்களை வடம்பிடித்து இழுத்து வருகின்னர்.
4/7

நான்கு வீதிகளிலும் திரண்டுள்ள பக்தர்கள் வீதிகளில் மாக்கோலம் இட்டு சிவ வாத்தியங்கள் இசைத்து சிவதாண்டவங்கள் ஆடி தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
5/7

நான்கு வீதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சுவாமிகளை வரவேற்கும் விதமாக பூரண கும்ப வரவேற்பு அளித்ததுடன் மாவிலை தோரணங்கள் வாழை மரங்கள் கட்டி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
6/7

இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. தொடர்ந்து ஐந்து தேர்களும் நான்கு மாடவீதிகளை வலம் வந்து மாலை தேர் நிலையை வந்து அடையும்.விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நாளை மதியம் நடைபெற உள்ளது.
7/7

image 7
Published at : 26 Dec 2023 01:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement