மேலும் அறிய
Ragi Kozhukattai : சத்து நிறைந்த ராகி கொழுக்கட்டை.. மாலையில் செய்து சாப்பிடுங்க!
Ragi Kolkattai : குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் ராகி கொழுக்கட்டையில் நிறைந்துள்ளது.

ராகி கொழுக்கட்டை
1/6

தேவையான பொருட்கள் : ராகி மாவு - 1 கப், வெல்லம் - 1 கப், தண்ணீர் - 1/4 கப், அவல் - 1/2 கப், துருவிய தேங்காய் - 1 கப், பொடித்த வேர்க்கடலை - 1/2 கப், வெல்லம், நெய் , ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
2/6

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் இறக்கி விடவும்
3/6

ஒரு கடாயில் ராகி மாவை சேர்த்து ராகி வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதில் அரை கப் பொடியாக அரைத்த அவலை சேர்த்து வறுக்கவும்.
4/6

அடுத்தது ஒரு கப் தேங்காய் துருவல் கலந்து கொள்ளவும். அடுத்து அரை கப் பொடியாக அரைத்த வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.
5/6

அடுப்பை அணைத்து, வெல்ல பாகை வடிகட்டி ராகியுடன் சேர்க்கவும். சிறிது நெய் ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
6/6

வெல்ல பாகுடன் ராகி மாவை நன்கு மிக்ஸ் செய்யவும். மாவை கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சத்தான ராகி கொழுக்கட்டை தயார்.
Published at : 15 Jun 2024 11:35 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement