மேலும் அறிய
Osaka Film Festival : மாஸ்டர் முதல் மாநாடு வரை..கடல் கடந்து அங்கீகாரம் பெற்ற தமிழ் படங்கள்!
இந்தாண்டின் ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற படங்கள் குறித்து காண்போம்.

ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்ற படங்கள்
1/8

ஜப்பான் நாட்டில் தமிழ் மக்களையும் அவர்களது திரை படைப்புகளையும் பொதுமக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இதை பறைசாற்றும் விதமாக ஒசாகா தமிழ் திரைப்பட விருது விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது
2/8

ஒசாகா தமிழ் திரைப்பட விருது விழாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச்சென்றது
3/8

ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்காக சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகைக்கான விருதை மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் வென்றுள்ளனர்.
4/8

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மூன்று விருதுகளை தட்டிச்சென்றது . சிறந்த படத்திற்கான விருதையும் சிறந்த இயக்குநருக்கான விருதையும் சிறந்த கலை இயக்குநருக்கான விருதையும் வென்றுள்ளது.
5/8

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படமும் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை யுவன் ஷங்கர் ராஜாவும் சிறந்த திரைக்கதைகான விருதை வெங்கட் பிரபுவும் வென்றுள்ளனர்.
6/8

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்திற்காக சிறந்த நகைச்சுவைக்கான விருதை ரெடின் கிங்ஸ்லி மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ஜாரா வினீத் பெற்றுள்ளார்.
7/8

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியான டெடி படத்திற்காக சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்கான விருதை என்எக்ஸ்ஜென் மீடியா ஹவுஸ் வென்றுள்ளது
8/8

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்திற்காக சிறந்த ஓலி வடிவமைப்பாளர்கான விருதை டி. உதய குமார் பெற்றுள்ளார்.
Published at : 22 May 2023 05:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement