மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பராசக்தி முதல் விஸ்வரூபம் வரை... ரிலீஸூக்கு முன் அரசியல் நெருக்கடியை சந்தித்த படங்கள்
பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரா நெருக்கடிக்கு மத்தியில் தான் திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி அரசியல் காரணங்களுக்காக பெரும் எதிர்ப்புகளை சந்தித்து பின் வெளியான படங்களைப் பார்க்கலாம்
![பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரா நெருக்கடிக்கு மத்தியில் தான் திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி அரசியல் காரணங்களுக்காக பெரும் எதிர்ப்புகளை சந்தித்து பின் வெளியான படங்களைப் பார்க்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/401e6f94cba8d04b3d242cd1e045d18d1731406282975572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரசியல் எதிர்ப்பை எதிர்கொண்ட படங்கள்
1/6
![கலைஞர் கருணாநிதி திரைக்கதை எழுதி சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படம் 1952 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் இந்துக்கள் மற்றும் பார்ப்பனர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது. அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் தமிழக முதல்வராக இருந்த ராஜகோபாலச்சாரி படத்தை வெளியிட அனுமதி வழங்கினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/5abc3443141aea043f5ea09e743253dd2de00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கலைஞர் கருணாநிதி திரைக்கதை எழுதி சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படம் 1952 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் இந்துக்கள் மற்றும் பார்ப்பனர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது. அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் தமிழக முதல்வராக இருந்த ராஜகோபாலச்சாரி படத்தை வெளியிட அனுமதி வழங்கினார்
2/6
![நிழல்கள் ரவி, லட்சுமி நடித்து ஜோதி பாண்டியன் இயக்கிய திரைப்படம் ஒரே ஒரு கிராமத்திலே. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூறித்து எதிர்மறையான கருத்துக்கள் இருப்பதாக கூறி இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின் உச்ச நீதிமன்றம் படத்தின் மீதான தடையை நீக்கி படம் வெளியானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/db7ca8a01d8b0de4ad783910da7f3942c52ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நிழல்கள் ரவி, லட்சுமி நடித்து ஜோதி பாண்டியன் இயக்கிய திரைப்படம் ஒரே ஒரு கிராமத்திலே. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூறித்து எதிர்மறையான கருத்துக்கள் இருப்பதாக கூறி இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின் உச்ச நீதிமன்றம் படத்தின் மீதான தடையை நீக்கி படம் வெளியானது
3/6
![ராம்கி , ரஹ்மான் , ரோஜா , ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்து ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான படம் குற்றப்பத்திரிகை. ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் ஈழப்போரை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு 15 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு வெளியாக இருந்த இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/e1bbe601892eb121be65bf0c8b48a83e1a3f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராம்கி , ரஹ்மான் , ரோஜா , ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்து ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான படம் குற்றப்பத்திரிகை. ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் ஈழப்போரை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு 15 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு வெளியாக இருந்த இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.
4/6
![மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் , பிரகாஷ் ராஜ் நடித்த இருவர் படத்திற்கு சென்சார் வாரியம் தணிக்கை சான்றிதழ் மறுத்துவிட்டது. தமிழக அரசியல் களத்தின் மூன்று பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் , கருணாநிதி , மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் பல்வேறு சிக்கல்களுக்குப் பின் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/c2d5d789f64a19efeae1785a2fcf3539d849c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் , பிரகாஷ் ராஜ் நடித்த இருவர் படத்திற்கு சென்சார் வாரியம் தணிக்கை சான்றிதழ் மறுத்துவிட்டது. தமிழக அரசியல் களத்தின் மூன்று பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் , கருணாநிதி , மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் பல்வேறு சிக்கல்களுக்குப் பின் வெளியானது.
5/6
![கமல்ஹாசன் இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருந்தது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக கூறி இப்படத்திற்கு ஐபிசி 144 பிரிவின் கீழ் இந்தியா , மலேசியா , மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. பின் தடை நீங்கி படம் பிப்ரவரி மாதம் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/66e558201ea5d5040a13f96507a57ccc8387f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கமல்ஹாசன் இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருந்தது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக கூறி இப்படத்திற்கு ஐபிசி 144 பிரிவின் கீழ் இந்தியா , மலேசியா , மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. பின் தடை நீங்கி படம் பிப்ரவரி மாதம் வெளியானது.
6/6
![ஓளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான படம் இனம். இப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு எதிர்ப்புகளால் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. ஈழப்போரில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததே இதற்கு காரணம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/d622165939b5fd5e5238b6093bd20369e2f02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான படம் இனம். இப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு எதிர்ப்புகளால் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. ஈழப்போரில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததே இதற்கு காரணம்
Published at : 12 Nov 2024 03:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion