மேலும் அறிய
Vijay Song: விஜய்யின் பெட்ரூம் வரை சென்று பிரபலம் செய்த செயல்; வாடி வாடி கைப்படாத சீடி பாடல் உருவான டாப் சீக்ரெட்!
சச்சின் படத்தில் இடம் பெற்ற வாடி வாடி கைப்படாத சீடி பாடல் உருவான விதம மற்றும் விஜய்யின் பெட்ரூமுக்கு சென்ற பிரபலம் பற்றி இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் கூறியிருக்கிறார்.

சச்சின் பட பாடல் உருவானது குறித்து இயக்குனர் பகிர்ந்த தகவல்
1/5

இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனீலியா, ரகுவரன், வடிவேலு ஆகியோர் பலர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சச்சின். கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு, இசையமைத்திருந்தார்.
2/5

ரொமாண்டிக் காதல் காட்சிகளை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தான் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடக்கும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு அறிவித்துள்ளார்.
3/5

இந்த நிலையில் தான் மகேந்திரனின் மகனும், படத்தின் இயக்குநருமான ஜான் மகேந்திரன், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், இந்தப் படத்தில் இடம் பெற்ற வாடி வாடி பாடல் எப்படி உருவானது என்பது குறித்தும், விஜய்யின் பெட்ரூமுக்கு சென்ற அந்த பிரபலம் பற்றியும் கூறியிருக்கிறார்.
4/5

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விஜய்யின் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவர் விஜய்யிடம் வாய்ஸ் ரூம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் வாய்ஸ் ரூமிற்கு எங்கு செல்வது என்று கேட்டுள்ளார்.
5/5

உடனே, வார்டு ரோப் ரூம் இருக்கா என்று கேட்டுள்ளார். இதையடுத்து விஜய் பெட்ரூம் காட்டியிருக்கிறார். அந்த ரூமுக்குள்ள சென்ற தேவி ஸ்ரீ பிரசாத், வாய்ஸ் ரூம் ரெடி செய்திருக்கிறார். அங்கிருந்து தான் விஜய்யின் சச்சின் படத்தில் இடம் பெற்ற வாடி வாடி கைபடாத சீடி என்ற பாடலை பாடியிருக்கிறார் என்று ஜான் மகேந்திரன் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 24 Feb 2025 09:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion