மேலும் அறிய
கட்டதுரை குடும்பத்துக்கு வாரிசு வரப்போகுது; மனைவி மரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ஷாரிக்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஷாரிக், தற்போது தன்னுடைய மனைவியுடன் இணைந்து குட்நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளார்.
மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ஷாரிக்
1/8

தமிழ் சினிமாவில் இருக்கும் வில்லன் நடிகர்களில் ஒருவர் சிக்ஸ்பேக் மன்னன் ரியாஸ் கான். ஆத்மா என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கள்ளழகர், பத்ரி, சமுத்திரம், ஆளவந்தான், பாபா, ரமணா, வின்னர், ஒற்றன், கஜினி, திருப்பதி, பேரரசு, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, பேட்ட ராப் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
2/8

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். சித்தி, அண்ணாமலை, நந்தினி, மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர், தனது தங்கையின் தோழியான உமா ரியாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் என்ற மகன் இருக்கிறார்.
Published at : 22 Feb 2025 09:26 PM (IST)
மேலும் படிக்க





















