மேலும் அறிய
‘எப்படி ப்ரொபோஸ் செய்து பெண்களை கவர்வது’ - சீயான் விக்ரம் சொன்ன பதில் என்ன?
முன்பெல்லாம் காதல் தோல்வி என்றால் தாடி வளர்ப்பார்கள் இப்போது காதலிப்பதற்காகவே தாடி வளர்க்கிறார்கள் - மதுரையில் பெண்கள் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் நடிகர் சீயான் விக்ரம் பேச்சு.

சியான் விக்ரம்
Source : whats app
எனதுயிரே எனதுயிரே பாடலை மாணவிகளோடு சேர்ந்து பாடிய சீயான் விக்ரம், ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவிகள்.
வீர தீர சூரன் 2 - ப்ரோமோஷன்
சேதுபதி, சித்தா திரைப்படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் 62 -வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷரா விஜயன், ஆகியோர் நடித்து ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நடிகர் விக்ரம் மற்றும் பட குழுவினர் பல்வேறு கல்லூரிகளிலும் பிற மாநிலங்களிலும் படத்தின் ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் மதுரை பறவை பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடிகர் விக்ரம் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் நடிகர் விக்ரமை கண்டு ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் அவருக்கு பரிசுகள் வழங்கி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விக்ரம் பீமா படத்தின் எனதுயிரே பாடலை பாடும்போது மாணவிகள் உற்சாகமாக கரகோஷங்களையும், கோசங்களையும் எழுப்பி விக்ரமுடைய இணைந்து பாட்டு பாடினர். தொடர்ந்து சீயான் விக்ரமுடன் சேர்ந்து படக்குழுவினர் மேடையில் மாணவிகள் முன்பாக நடனம் ஆடினர்.
துஷரா விஜயன்
நாயகி துஷரா விஜயன் பேசுகையில்..,” நம்ம ஊர் மதுரை, நான் திண்டுக்கல் பொண்ணு உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய இடம் நமது மேலூர் மதுரையில் தான். சித்தா படத்தை தொடர்ந்து இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும். விக்ரம் சார் பயங்கரமாக நடித்துள்ளார்.
சீயான் விக்ரம்
தொடர்ந்து சீயான் விக்ரம் மாணவிகள் மத்தியில் பேசுகையில்...,” அருண்குமார் சிறந்த இயக்குநர் சித்தா படம் எந்த அளவுக்கு உங்களுக்கு பிடித்ததோ அந்த அளவுக்கு வீர தீர சூரன் திரைப்படமும் பிடிக்கும். எப்போது மதுரைக்கு வரும்போது ஒரு எனர்ஜி கிடைக்கும். நன்றாக படியுங்கள்” என்றார். தொடர்ந்து சில நக்கல் ஆன கேள்விகளுக்கு பதில் அளித்த விக்ரம். “முன்பெல்லாம் காதல் தோல்வி என்றால் தாடி வளர்ப்பார்கள் இப்போது காதலிப்பதற்காகவே தாடி வளர்க்கிறார்கள். தொடர்ச்சியாக இப்போது எல்லா படத்திலும் நானும் தாடி வைத்து நடிக்கிறேன் என்றார்.
எப்படி ப்ரொபோஸ் செய்து பெண்களை கவர்வது என்ற கேள்வி
நான் ஆண்கள் கல்லூரியில் படித்தேன் எனது வகுப்பில் மூன்று பெண் மாணவிகள் தான்இருந்தார்கள். அதில் ஒருவர் சிஸ்டர், ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் எனது தாய் வயதில் இருந்தவர் நான் ஏற்கனவே எனது தாயை காதல் செய்வதால் யாரையும் லவ் செய்ய இயலவில்லை. இங்கு வந்து பார்த்தால் இவ்வளவு இருக்கிறீர்கள் நான் ஏன் இந்த கல்லூரியில் படிக்கவில்லை என்று வருத்தமாக உள்ளது என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். தொடர்ந்து மாணவிகளுடன் விக்ரம் மேடையில் இருந்தவாறு செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார் .
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion