Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
தவெக தலைவர் விஜய், இப்போதும் சரி, நடிகராக இருக்கும்போதும் சரி, எந்த விழாவில் பேச்சை ஆரம்பித்தாலும், ஒரு வழக்கத்தை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், அதை அவர் மாற்றியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரத்தில் பிரமாண்ட விழாவாக நடைபெற்றது. இதில், பிரஷாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் விஜய் பேசும்போது, அவர் வழக்கமான பாணியில் பேச்சை ஆரம்பிக்காததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விஜய்யின் நெஞ்சில் குடியிருந்த ரசிகர்கள்
விஜய், பெரும் போராட்டங்களுக்கு மத்தியில், தனது திறமை மற்றும் உழைப்பால், இன்று ஒரு நடிகனாக, அதுவும் சாதாரண நடிகனாக அல்ல, தமிழ் திரையுலகின் ஒரு உச்ச நட்சத்திரமாக, ஒரு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருகிறார். திறமையும், உழைப்பும் இருந்தால், அதிர்ஷ்டம் தேடி வரும் என்று கூறார்கள். அப்படி அவரை தேடி வந்த அதிர்ஷ்டம் தான் அவரது ரசிகர்கள். விஜய்யின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றியவர்கள் அவரது ரசிகர்கள்தான். வெறும் ரசிகர்களாக மட்டுமில்லாமல், அவரது மக்கள் இயக்க உறுப்பினர்களாக மாறி, அவரது கனவிற்கு வடிவம் கொடுத்தவர்களும், அதே ரசிகர்கள்தான்.
இப்படி, அவரது ஒவ்வொரு வளர்ச்சியிலும், ரசிகர்களே அவருக்கு மிக முக்கியமாக இருந்துள்ளனர். அவரும் அதற்கு ஏற்றார்போல், எந்த ஒரு உரையை தொடங்கினாலும், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு‘ என்று கூறித்தான் பேச்சை தொடங்குவார். அந்த அளவிற்கு ரசிகர்களை அவர் முக்கியமாக கருதினார். அவருடைய நெஞ்சில் குடியிருந்த அந்த ரசிகர்கள்தான் தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களாகவும் மாறியுள்ளனர். அவர்களின் எழுச்சியோடுதான், விஜய் தற்போது அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்
இப்படிப்பட்ட ஒரு சூழலில், தற்போது விஜய்யின் முக்கியத்துவம், அதாவது அவரது நெஞ்சில் குடியிருப்பது யார் என்பதில் இருந்த முக்கியத்துவம் மாறிவிட்டதோ என எண்ணும் அளவிற்கு ஒரு செயலை அவர் செய்திருக்கிறார். ஆம், தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பேச வந்த அவர், ஆரம்பித்ததே பிரஷாந்த் கிஷோரைப் பற்றிதான்.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்‘ எனக் கூறி வழக்கமாக பேச்சை தொடங்கும் விஜய், இன்று My Friend எனக் கூறி, பிரஷாந்த் கிஷோர் வருகைக்கு அவருக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், தனது கட்சி அவருடன் பணியாற்றுவது குறித்து ஆங்கிலத்தில் பேசிவிட்டு, அதன் பிறகுதான், தனது வழக்கமான பேச்சை ஆரம்பித்தார்.
இதை பார்த்த அவரது தொண்டர்களான ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இவ்வளவு நாட்கள் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய், நேற்று வந்த பிரஷாந்த் கிஷோருக்காக தனது முக்கியத்துவத்தை மாற்றியதால், அவர்கள் பெரும் வருத்தமும், வேதனையும் அடைந்தனர்.
அவரது இந்த செயல், வழக்கமான அரசியலவாதிகள் போல் ஆகிவிட்டதாக கருத்துகள் பரவ ஆரம்பித்துவிட்டன. ஏனென்றால், அரசியல்வாதிகள் தான், யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு யார் உதவி செய்கிறார்களோ, அவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில், இன்று அவர் மேடை ஏற்றியதும், பிரஷாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா போன்றோரைத்தான்.
இதனால், தனது வழக்கத்தை மாற்றிய விஜய், ஒரு வழக்கமான அரசியல்வாதி ஆகிவிட்டாரோ என்ற கேள்விகள் எழுகின்றன. எல்லாம், போகப் போக தெரியும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

