GT vs PBKS: சேசிங்குக்கு நாங்க ரெடி! டாஸ் வென்றார் கில்.. ரன்களை கட்டுப்படுத்துமா குஜராத் டைட்னஸ்
GT vs PBKS: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பந்து வீசுவதாக குஜராத் டைடன்ஸ் அணி அறிவித்தது.

ஐபிஎல் 2025-ன் நான்காவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற கில்:
இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற சுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார், நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம் இது ஒரு நல்ல விக்கெட். இங்கே கொஞ்சம் பனி இருக்கிறது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பனி இங்கே ஒரு பெரிய காரணமாக உள்ளது அதனால் பெரிய இலக்குகளை துரத்த முடியும். எங்களின் பயிற்சி தயாரிப்பு அற்புதமாக உள்ளது. . பந்துவீச்சு தாக்குதல் நன்றாக உள்ளது. உலகின் மிகப்பெரிய மைதானத்தில் விளையாடுவது மிகவும் அதிர்ஷ்டம். இன்றைய போட்டியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் இடம்பெற்று இருக்கின்றனர் என்றார்.
ஸ்ரேயஸ் ஐயர்:
டாஸ் குறித்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர் எனக்கு பந்து வீசுவது மிகவும் பிடிக்கும். நான் எப்போதும் சேசிங்கை விரும்புபவன். சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். சுற்றி நிறைய பரிச்சயமான முகங்கள் உள்ளன. ரிக்கி இருக்கிறார். அணியில் ஒற்றுமை மற்றும் சினெர்ஜி தேவை. அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். எங்களுக்கு தேர்வுகள் கடினமாக இருந்தது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போவதால், எங்களிடம் ஒரு ஸ்பின்னர் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றார்.
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
பிரப்சிம்ரன் சிங்(கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், அஸ்மதுல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: நேஹால் வதேரா, பிரவீன் துபே, வைஷாக் விஜய்குமார், ஹர்பிரீத் ப்ரார், விஷ்ணு வினோத்
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):
ஷுப்மன் கில்(கீப்பர்), ஜோஸ் பட்லர்(கீப்பர்), சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
குஜராத் டைட்டன்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்

