மேலும் அறிய

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்

செங்கோட்டையன் இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவகாரமே அதிமுக வட்டாரத்தில் அடங்காத நிலையி, இபிஎஸ்-ன் வலதுகரமான தங்கமணியும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை புறக்கணித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே 2 பேருக்கும் இடையே இருந்த மோதல் தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்காக வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் தலைமை அலுவலகத்தில் குவிந்த நிலையில் 2 பேர் மட்டும் அந்தப் பக்கமே வராமல் தவிர்த்தனர். ஒன்று செங்கோட்டையன் மற்றொன்று தங்கமணி.

செங்கோட்டையன் ஏற்கனவே இபிஎஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தவிர்த்தது பூகம்பமாக வெடித்தது. கோவையில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறாததால் தான் நிகழ்ச்சியை புறக்கணித்ததாக சொன்னார் செங்கோட்டையன். இந்த விவகாரம் பற்றி அதிமுகவினரிடம் கேட்கும் போது மழுப்பான பதிலை கொடுத்து வந்தனர்.

இந்தநிலையில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் தங்கமணியும் அதனை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாகவும், அதனால் தான் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் சொல்கின்றனர். இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அவருக்கு வலதுகரமாக இருந்தவர் தான் தங்கமணி. இபிஎஸ்-ன் சம்பந்தி வழி உறவினர் என்பதாலும் இருவருக்கும் நெருக்கம் அதிகம். இபிஎஸ் ஆட்சியின் போது அவருக்கு நிதியுதவி செய்தது, தனது லாபிகளை வைத்து இபிஎஸ்-க்கு தேவையானவற்றை செய்வது என தங்கமணி தான் பின்னிருந்து நிறைய வேலைகளை முடித்ததாக பேச்சு இருக்கிறது.

ஆனால் தற்போது தன்னையே ஓரங்கட்டிவிட்டு மற்றவர்களுக்கு இபிஎஸ் முக்கியத்துவம் கொடுப்பதால் தங்கமணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு தங்கமணியிடம் தான் ஓபிஎஸ் தரப்பு சென்றதாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதற்கு தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தியும் இபிஎஸ் விடாப்பிடியாக இருந்ததும் தங்கமணிக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

மக்களவை தேர்தல் சமயத்தில் திருச்சி தொகுதியில் யாரை களமிறக்குவது என்பதில் தங்கமணி, விஜயபாஸ்கர் இடையே மோதல் நடந்து வந்துள்ளது. தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த போது, விஜயபாஸ்கர் சொன்ன கருப்பையாவுக்கே இபிஎஸ் டிக் அடித்ததால் தங்கமணி ஆத்திரம் அடைந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து இபிஎஸ் உடன் அவருக்கு பனிப்போர் நடந்து வந்துள்ளது. அதேபோல் தேர்தலில் அடுத்தடுத்து தோல்வி அடைவதும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சோர்வை கொடுத்துள்ளதாக பேசப்படுகிறது.

தற்போது செங்கோட்டையன், தங்கமணி என கட்சியின் முக்கிய நபர்களே அடுத்தடுத்து அதிமுகவில் மறைமுகமாக போர்க்கொடி தூக்கி வருவது அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இபிஎஸ்-ம் இந்த விவகாரங்களில் எதுவும் சொல்லாமல் சைலண்ட் மோடில் இருப்பதும் விமர்சன வலையில் சிக்கியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Karuppu Muruganantham: கைவிட்ட கோர்ட்.. கைதாகிறாரா பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம்?
Karuppu Muruganantham: கைவிட்ட கோர்ட்.. கைதாகிறாரா பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம்?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
சேலத்தை உலுக்கிய சம்பவம்: ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற 6 பெண்கள்!
சேலத்தை உலுக்கிய சம்பவம்: ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற 6 பெண்கள்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
Embed widget