மேலும் அறிய

திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, ஒரு நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு திரை உலகில் உதவி இயக்குனராக பணியாற்றி, தியேட்டர் ஆர்டிஸ்ட் பயிற்சி பெற்ற பின்னர், தன்னுடைய தந்தை இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. 10-திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், இயக்குனராகவும் பிரபலமான மனோஜ் பாரதிராஜாவுக்கு, சில நாட்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் நடந்த நிலையில்... இன்று மாலை சேத்துப்பட்டில் உள்ள அவருடைய வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 48 வயதே ஆகும் இயக்குனர் பாரதிராஜா மகன்... மனோஜ் மரணம் குறைத்து அறிந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து இவருடைய இழப்புக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு, குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

மனோஜ், ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் போது... தன்னுடன் நடித்த மலையாள நடிகை நந்தனா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற நிலையில், திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. மனோஜ் மற்றும் நந்தனா இருவரும் சாதுரியன் என்ற படத்தில் இணைந்து நடித்த போதுதான் காதலிக்க துவங்கினர். ஆரம்பத்தில் வந்தனா வீட்டில் சம்மதிக்காத நிலையில் பின்னர் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டி திருமணத்தையும் நடத்தி வைத்தனர். 

மனோஜ் பாரதி ராஜா, ஒரு நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான 'மார்கழி திங்கள்'  என்ற படத்தை இயக்கினார். அதோடு இந்தப் படத்தில் தனது அப்பாவையும் நடிக்க வைத்திருந்தார். தன்னுடைய தந்தையை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தனக்கு மிகப்பெரிய கனவு என்றும், இந்த படம் மூலம் தன்னுடைய கனவு நிறைவேறியதாகவும் தெரிவித்தார். 

நடிகர்,இயக்குனர் என்பதை தாண்டி பின்னணி பாடகராகவும் மனோஜ் சில பாடல்களை பாடியுள்ளார். தாஜ்ஹமால் படத்தில் இடம் பெற்ற Eechi Elemichhi என்ற பாடலை தான் மனோஜ் பாடி இருந்தார். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாஜ்மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமான மனோஜ், சரத்குமாரின் சமுத்திரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். இதே போன்று கடைசியாக வெளியான விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு அண்ணனாக நடித்திருந்தார். இது தவிர அல்லி அர்ஜூனா, அன்னக்கொடி, மகா நடிகன், ஈர நிலம், வாய்மை, சாம்பியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிகராக வருவதற்கு முன்னதாக, Final Cut of Director-ராகவும், உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை போலவே தற்போது இவரது மூத்த மகளும், திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இளைய மகள் தற்போது படித்து கொண்டிருக்கிறார். அனைவருடனும் அன்பாக பழகும் மனம் கொண்ட மனோஜ் பாரதி ராஜாவின் இழப்பு தற்போது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
Embed widget