மேலும் அறிய
Janani Engagement: 36 வயதில் பேச்சிலர் லைஃப்புக்கு எண்டு கார்டு போட்ட நடிகை ஜனனி! பிரமாண்டமாக நடந்த நிச்சயம்; காதலர் யார் தெரியுமா?
தமிழில் பட படங்களில், எதார்த்தமான கதைக்களத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை ஜனனிக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை ஜனனிக்கு காதலருடன் நடந்த நிச்சயதார்த்தம்
1/6

சென்னையை சேர்ந்தவர் தான் நடிகை ஜனனி. மாடலாக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அந்த வகையில் கடந்த 2009-ஆம் ஆண்டு அஜ்மல் அமீர் ஹீரோவாக நடித்த 'திரு திரு துரு துரு' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
2/6

விண்ணை தாண்டி வருவாயா படத்திலும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு அசிஸ்டெண்டாக நடித்திருப்பார். ஆனால் இவருக்கு தமிழில் ஹீரோயின் என்கிற அடையாளத்தை கொடுத்தது, இயக்குனர் பாலா இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான 'அவன் இவன்' திரைப்படம் தான்.
3/6

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பேபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட், விதி மதி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும், சில மலையாள படங்களிலும் நடித்தார்.
4/6

36 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஜனனிக்கு தற்போது இவரது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
5/6

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்து... துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துளளார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
6/6

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி சென்னையில் இவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
Published at : 16 Apr 2025 08:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement