மேலும் அறிய
Yennai Arindhaal Remake : சத்ய தேவாக சல்மான் கான்..ஹிந்தியில் ரீமேக் ஆகும் என்னை அறிந்தால்!
Yennai Arindhaal Remake : ஸ்டைலிஷ் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் என்னை அறிந்தால் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் ஹிந்தி ரீமேக்
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
2/6

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார், அருண் விஜய், திரிஷா, அனுஷ்கா உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர்.
3/6

க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்ட என்னை அறிந்தால் திரைப்படத்தில் முதல் முறையாக அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அருண் விஜய் நடித்திருந்த விக்டர் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
4/6

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி என்னை அறிந்தால் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாம்.
5/6

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் நடிக்கவுள்ளார்
6/6

முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா படத்தை கெளதம் மேனன் ஹிந்தியில் ரீமேக் செய்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 08 Nov 2023 06:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement