IND Russia: இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை
IND Russia NATO: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என, நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.

IND Russia NATO: ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை, நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டோ பொதுச்செயலாளர் எச்சரிக்கை:
இந்தியா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யா உடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தால், கடும் வரிவிதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என, நாட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ஆயுதங்களை வழங்க உள்ளதாகவும் ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு கடும் வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த மறுநாளே, அமெரிக்க செனட்டர்கள் உடனான சந்திப்பில் மார்க் இவ்வாறு பேசியுள்ளார்.
”100 சதவிகிதம் வரி விதிப்பேன்”
அந்த உரையில், “ஒருவேளை நீங்கள் சீனாவின் அதிபாராக இருந்தலோ, இந்தியாவின் பிரதமராக இருந்தாலோ அல்லது பிரேசிலின் அதிபராக இருந்தாலோ, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு தொடர்பான வர்த்தகத்தை தொடர்ந்தால் பின்பு உங்களுக்கே தெரியும். மாஸ்கோவில் உள்ள நபர் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால், அவர்களுடன் வணிகள் செய்யும் நாடுகள் மீது நான் 100 சதவிகிதம் வரி விதிப்பேன்.
குறிப்பிட்ட மூன்று நாடுகளிடமும் நான் ஊக்கப்படுத்துவது என்னவென்றால், பீய்ஜிங் அல்லது டெல்லியில் நீங்கள் வாழ்பவராக இருந்தால், இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டும். இல்லையெனில் எங்களது வரி விதிப்பு உங்களை கடுமையாக பாதிக்கக் கூடும். சீனா, இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு தலைவர்கள், ரஷ்ய அதிபர் புதினை தொடர்புகொண்டு பேசி, அமைதி பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்த வலியுறுத்த வேண்டும்” என நாட்டோ பொதுச்செயலாளர் பேசியுள்ளார்.
மிரட்டிப் பார்க்கும் ட்ரம்ப்:
உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக, ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த அமெரிக்கா மற்றும் நாட்டோ அமைப்பு தீவிரம்காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, வான் தாக்குதலை தவிர்க்க அதிநவீன ஆயுதங்களை அனுப்புவதோடு, ரஷ்ய பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 50 நாட்களுக்குள் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டல், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கு உதவி செய்யும் நாடுகள் மீது கடும் வரி விதிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கூட்டாளி இந்தியா:
வெளியாகியுள்ள தகவல்களின்படி, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடுகளில் முதன்மையாக நாடுகளாக உள்ளன. ட்ரம்ப் பொருளாதாரத் தடைகளை விதித்தால், இந்த நாடுகள் குறிப்பாக இந்தியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். உலகளாவிய விலைகள் ஏற்கனவே நிலையற்றதாக இருக்கும் நேரத்தில், இந்த நடவடிக்கை எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்து செலவுகளை அதிகரிக்கக்கூடும்.
டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் பேசுகையில், "பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது, ஆனால் இறுதி எச்சரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் எந்த பலனையும் தராது" என்றார்.




















