மேலும் அறிய
Rana sonam controversy : வாய்விட்டு மாட்டிக்கொண்ட ராணா..இன்ஸ்டாவில் பதிலடி கொடுத்த சோனம் கபூர்!
நடிகர் ராணாவிற்கும் நடிகை சோனம் கபூருக்கும் இடையே நடந்த பிரச்சினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

ராணா - சோனம்
1/6

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள படம் கிங் ஆஃப் கோதா. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகவுள்ளது.
2/6

இந்த படத்தின் ப்ரோமோஷன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராணா, துல்கருடன் ஹிந்தி படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தார்.
3/6

“துல்கர் மிகவும் பொறுமையானவர். ஏனென்றால் படப்பிடிப்பு நடுவே முன்னணி நடிகை ஒருவர் தனது கணவருடன் போனில் ஷாப்பிங் பற்றி பேசுவது மற்றும் வசனங்களை மறந்து பல டேக்குகள் வாங்குவதுமாக இருப்பார். ஆனால், துல்கர் மிக பொறுமையாக நடிப்பார்”என்றார் ராணா.
4/6

ராணா, நடிகை சோனம் கபூரை பற்றி பேசியிருக்கிறார் என்ற கருந்து இணையத்தில் பரவி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் ராணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
5/6

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தத்துவம் ஒன்றை மேற்கோள்காட்டி,‘இந்த சின்ன விஷயத்தை சில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மற்றவர்களை பற்றி பேசும் போது..’என சோனம் கபூர் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
6/6

நடிகர் துல்கர் சல்மானும் சோனம் கபூரும் தி ஸோயா பேக்டர் படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடதக்கது.
Published at : 17 Aug 2023 04:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion