மேலும் அறிய

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு; கோட்டை விட்ட திமுக - ரவுண்டு கட்டும் அன்புமணி

உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது - அன்புமணி

சீன கார் நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு,  உண்மையாகவே முதலீட்டை ஈர்க்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி (BYD - Build Your Dreams) ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது மகிழுந்து உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டிற்கு இந்த மகிழுந்து ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

உலக சந்தையில் மின்சார வாகனங்கள் விற்பனையில் டெஸ்லா நிறுவனத்தை விஞ்சி வரும் பி.ஒய்.டி மகிழுந்து ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன. இந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன. அதற்குக் காரணம், 2019-ஆம் ஆண்டிலேயே பி.ஒய்.டி மகிழுந்து நிறுவனம் ரூ.2,800 கோடி செலவில் உதிரிபாகங்களை இணைத்து மின்சார வாகனங்களை உருவாக்கும் ஆலையை அமைத்திருந்தது. ஆனாலும் தமிழக அரசால் பி.ஒய்.டி நிறுவனத்தைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை.

மின்சார மகிழுந்துகள் உற்பத்திக்கு சாதகமான கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதும், அரசின் அனுமதியை பெறுவது மிகவும் எளிதாக இருப்பதும் தான் பி.ஒய்.டி மகிழுந்து நிறுவனம் தெலுங்கானாவுக்கு செல்வதற்கு காரணம் ஆகும். ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.

ஆந்திர மாநிலத்திடம் ரூ.8,000 கோடி மதிப்பிலான அந்நிய முதலீடுகளை கடந்த 3 மாதங்களில் தமிழக அரசு இழந்து விட்டதாக சில நாட்களுக்கு முன்பு தான் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த வருத்தம் மறைவதற்கு முன்பாகவே தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு கைநழுவி தெலுங்கானாவுக்கு சென்றிருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழகத்தின் திறன் குறைந்து வருவதையே இது காட்டுகிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, நடப்பாண்டில் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பது தான் இதற்குக் காரணம் ஆகும்.

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikram Misri US Visit: மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
TN Schools Reopen 2025: திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறப்பு;  இதெல்லாம் செய்யணும்; இதற்கு நோ- முக்கிய நெறிமுறைகள் வெளியீடு
TN Schools Reopen 2025: திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறப்பு; இதெல்லாம் செய்யணும்; இதற்கு நோ- முக்கிய நெறிமுறைகள் வெளியீடு
Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்
Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்
Tata Sierra EV: புதுசுலாம் வேணாம் - விண்டேஜ் மாடலை EV/ICE ஃபார்மில் களமிறக்கும் டாடா - மைலேஜ், ரேஞ்ச் - விலை
Tata Sierra EV: புதுசுலாம் வேணாம் - விண்டேஜ் மாடலை EV/ICE ஃபார்மில் களமிறக்கும் டாடா - மைலேஜ், ரேஞ்ச் - விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikram Misri US Visit: மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
TN Schools Reopen 2025: திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறப்பு;  இதெல்லாம் செய்யணும்; இதற்கு நோ- முக்கிய நெறிமுறைகள் வெளியீடு
TN Schools Reopen 2025: திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறப்பு; இதெல்லாம் செய்யணும்; இதற்கு நோ- முக்கிய நெறிமுறைகள் வெளியீடு
Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்
Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்
Tata Sierra EV: புதுசுலாம் வேணாம் - விண்டேஜ் மாடலை EV/ICE ஃபார்மில் களமிறக்கும் டாடா - மைலேஜ், ரேஞ்ச் - விலை
Tata Sierra EV: புதுசுலாம் வேணாம் - விண்டேஜ் மாடலை EV/ICE ஃபார்மில் களமிறக்கும் டாடா - மைலேஜ், ரேஞ்ச் - விலை
காருக்குள் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்! என்ன நடந்தது?
காருக்குள் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்! என்ன நடந்தது?
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
இரவு 2 மணிக்கு போஸ்டர் ஒட்டிய வனிதா...ஃபாதிமா பாபு சொன்ன தகவல்
இரவு 2 மணிக்கு போஸ்டர் ஒட்டிய வனிதா...ஃபாதிமா பாபு சொன்ன தகவல்
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Embed widget