(Source: ECI/ABP News/ABP Majha)
அட்டகாசமாக சுவற்றில் ஏறி அசர வைத்த 'ஸ்பைடர் கேர்ள்'- வைரல் வீடியோ !
சிறுமி ஒருவர் ஸ்பைடர் மேன் போல் அழகாக சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாக ஹாலிவுட் மற்றும் கார்டூன் படங்களில் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் தான். அவர் தன்னுடைய வெப்பை பயன்படுத்தி அசத்தலாக கட்டிடம் மற்றும் சுவர்களில் ஏறி செய்யும் சாகாசத்தை பலரும் வியந்து பார்த்து ரசிப்பது உண்டு. அத்துடன் ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து கொண்டு பலரும் அவர் செய்யும் சாகசங்களை முயற்சி செய்வதும் ஒரு சில நேரங்களில் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் சிறுமி ஒருவர் அசாத்தியமாக ஸ்பைடர் மேன் போல் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு சிறுமி எந்தவித பயமும் துணையும் இல்லாமல் தன்னுடைய வீட்டிலுள்ள ஒரு சுவற்றில் சுலபமாக ஏறி மேலே வரை சென்று சாகசம் செய்து போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அதன்பின்னர் அவரே கீழே வந்து குதிப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறுவயதில் அவர் ஒரு ஸ்பைடர் கேர்ள் போல் சாகசம் செய்வதை பலரையும் வியக்க வைத்துள்ளது.
Spidergirl . wait. Wtf 😬 pic.twitter.com/yT9NTIPYpJ
— Ffs OMG Vids 🔥📽 (@Ffs_OMG) September 15, 2021
இந்த வீடியோ கடந்த 16ஆம் தேதி ட்விட்டர் தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. இதை தற்போது வரை 1.7லட்சம் பேருக்கு மேல் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். அத்துடன் 3 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மேலும் பலரும் இந்தச் சிறுமி செய்யும் சாகசம் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
And just like that, James Wan had his next horror movie idea.
— Joe (@JoeAtWork87) September 15, 2021
I think I've seen this movie. It's the Conjuring, isn't it?
— Jimmy, No Relation™ (@HoorayBacon) September 15, 2021
Wow and woo and whoa 😍
— DavaStarr (@DavaStarr) September 15, 2021
Thats what the immunization does to you, start of the supernatural
— Al G. Albach (@Al91269706) September 16, 2021
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் - அமெரிக்கா, ஆஸ்திரேலியா தூதரை திரும்ப அழைத்தது பிரான்ஸ்