Watch Video: டிக்டாக் வீடியோ நீங்கதான் பாப்பீங்களா? நானும் பாப்பேன்.. வைரலாகும் மியாவ் வீடியோ
க்ளோயி என்ற அந்த பூனை ஒரு கஃபேவில் வசித்து வருகிறது.
![Watch Video: டிக்டாக் வீடியோ நீங்கதான் பாப்பீங்களா? நானும் பாப்பேன்.. வைரலாகும் மியாவ் வீடியோ video Of A Cat Who Loves To See Videos On People's Mobile Phones Goes Viral; Watch Watch Video: டிக்டாக் வீடியோ நீங்கதான் பாப்பீங்களா? நானும் பாப்பேன்.. வைரலாகும் மியாவ் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/28/c7f222efcd56ccc3b363f18fce153cd6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இணையத்தில் வழக்கமாகவே வித்தியாசமாக ஏதோ ஒன்றை செய்யும் பூனைகள், நாய்கள் வைரலாவது வழக்கம். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அடிக்கடி அவை செய்யும் கியூட்டான செயல்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார்கள்.
அந்த வரிசையில்தான் தற்போது ஜப்பானைச் சேர்ந்த இன்னொரு பூனை இணைந்திருக்கிறது. யூடியூப், டிக்டாக் வீடியோக்களை கண்ணெடுக்காமல் ஆர்வமாகப் பார்க்கிறது அந்தப் பூனை. க்ளோயி என்ற அந்த பூனை ஒரு கஃபேவில் வசித்து வருகிறது. அந்த கஃபேவுக்கு வருபவர்கள் காண்பிக்கும் வீடியோக்களை ஆர்வமாகப் பார்க்கிறது அந்தப் பூனை. இந்த வீடியோவை அந்த கஃபே நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளது. “ கஃபேயின் ஊழியர்களாலும், அவளது நண்பர்களாலும் க்ளோயி இப்படி ஆகிவிட்டாள். அவளுக்கு டிக் டாக் வீடியோக்களைப் பார்க்க ரொம்ப பிடிக்கும். இப்படித்தான் புது புது நண்பர்களை உருவாக்கிக் கொள்கிறாள். இவளை இங்கு வைத்திருப்பதில் மிகுந்த பெருமையடைகிறோம். இவளைப் போன்ற இன்னும் பல விளையாட்டுத்தனமான பூனைகளைத் தத்தெடுக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை இது வரை 81,807 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் வீடியோவிற்கு பலரும் கமெண்ட்களை இட்டு வருகின்றனர்.
View this post on Instagram
சமீபத்தில் மற்றொரு பூனையின் வீடியோ வைரலானது. அதனை ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் கார்னர் பகிர்ந்திருந்தார். அதில் சோம்பேறித்தனமாக படுத்துக்கொண்டே கீழே அந்த பூனை இறங்கி வரும். அந்த வீடியோவை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் லைக் செய்திருந்தனர்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)