Plane Crash: சோகம்..! கலிஃபோர்னியாவில் சிறிய ரக விமானம் விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
தெற்கு கலிஃபோர்னியாவில் நேற்று காலை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு கலிஃபோர்னியாவில் நேற்று காலை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
Aircraft Emergency:rpt@4:16 a.m. Auld Road X Briggs Road in French Valley. Cessna aircraft down in a field, fully involved in fire. The fire burned approximately one acre of vegetation, was contained at 5:35 a.m. and the incident has been turned over to RSO and the FAA. Please… pic.twitter.com/szG5HLH4n7
— CAL FIRE/Riverside County Fire Department (@CALFIRERRU) July 8, 2023
விமான விபத்து:
கலிஃபோர்னியாவின் முரியேட்டாவில் நேற்று அதிகாலை பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் செஸ்னா வணிக ஜெட் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்த போது விமானத்துடன் சேர்த்து சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு பயிர்களும் தீ பிடித்து எரிந்தது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தெற்கே சுமார் 85 மைல்கள் (136.79 கிமீ) தொலைவில் உள்ள தென்மேற்கு ரிவர்சைடு கவுண்டியில் உள்ள கலிபோர்னியாவின் முர்ரிடா நகரில் உள்ள விமான நிலையம் அருகே விமானம் விபத்துக்குள்ளானது.
6 பேர் உயிரிழப்பு:
இந்த விமானம் முதலில் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின்படி, அந்த விமானம் செஸ்னா சி550 தனியார் ஜெட் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரிவர்சைடு கவுண்டி தீயணைப்புத் துறையினர், அதிகாலை 4.15 மணிக்கு எரியும் விமானத்தை அதிகாரிகள் கண்ட பின், அதில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. கலிஃபோர்னியா விமானப் பயிற்றுவிப்பாளரான மேக்ஸ் ட்ரெஸ்காட், விபத்து ஏற்படும் சில நிமிடங்களுக்கு முன் கட்டுப்பாட்டை இழந்ததாக குறிப்பிட்டார். மேலும் வானிலை மோசமாக இருந்ததன் காரனத்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை காலை நடந்த விபத்து ரிவர்சைட் கவுண்டியில் உள்ள பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகே நடந்த இரண்டாவது விபத்து ஆகும். கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று விமான நிலையத்தின் கட்டிடத்தின் ஓரத்தில் ஒரு விமானம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூவர் காயமடைந்தனர். தொடர் விமான விபத்துக்கள் அப்பகுதியில் பதட்டததை ஏற்படுத்தியுள்ளது.