Russian invasion: மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது - உக்ரைனின் பதிலடித் தாக்குதலை எப்படி புரிந்துக் கொள்வது?
நாட்டின் பாதுகாப்பு மேலாண்மையில் (குறிப்பாக- non-commissioned officer cadreல் ) சிறந்த தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது. படைகளிடத்தில் நல்ல எழுச்சியும்,ஊக்கமும் காணப்பட்டது.
2014-15 காலகட்டங்களில் கிரீமியா மீது ரஷ்ய படையெடுக்கும் போது, உக்ரைன் ராணுவம் எந்தவித போராட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. உண்மையில், சொல்ல வேண்டுமென்றால், ஒரு சிறு தடையைக் கூட சந்திக்காமல் ரஷ்ய படைகள் அப்போது முன்னேறின. இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு மேலாண்மையில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் அதன் தரத்தை அதிகரித்தாலும், நடைமுறையில் உள்ள பலவீனங்கள் களையப்படாமலே உள்ளன.
தனது நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போரிடவும், நாட்டோ அமைப்பில் சேர்வதற்கான தகுதி பெறவும், தனது ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டங்களில் உக்ரைன் அரசு முன்னெடுத்தது. 2014-15க்குப் பிந்தைய காலகட்டங்களில், உக்ரைன் அரசு தனது ராணுவத்திற்கு மும்மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்தது.
இதன் காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், 800க்கும் அதிகமான பீரங்கி வாகனங்கள் மூலம் தனது தாக்கும் திறனை உக்ரைன் அதிகரித்தது. நாட்டின் 2 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்களை அனைத்து வகையான நிலபரப்புகளிலும் எளிதாக கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டன. நாட்டின் பாதுகாப்பு மேலாண்மையில் (குறிப்பாக- non-commissioned officer cadreல் ) சிறந்த தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது. படைகளிடத்தில் நல்ல எழுச்சியும்,ஊக்கமும் காணப்பட்டது.
ஆனால், நீண்ட நெடிய கதையின் ஒருபகுதி தான் இது. உக்ரைனின் பெரும்பாலான பீரங்கி வாகனங்களும், சாதனங்களும் மிகப் பழமையானது. T72 போன்ற பழைய பீரங்கி வாகனத்தை ராணுவத் தொழிற்சாலைகள் மூலம் உக்ரைன் நவீனப்படுத்தி வந்தாலும், ரஷ்யாவின் தாக்குதல், வாகன இயக்கம் மற்றும் நிலைத்தன்மையுடன் ஒருவரால் ஒப்பிட முடியாது. ரஷ்யா கொண்டுள்ள சில பீரங்கி வாகன வகைகள் நாட்டோ அமைப்புகள் கொண்டுள்ளதை விட மிக வலுமையானது.
உலகின் மிகப்பெரிய வீரியமான காலாட்படையை ரஷ்யா கொண்டுள்ளது. அதேபோன்று, அடுத்த தலைமுறை S-400 வான்வழி தாக்குதல் ஏவுகணையையும் ரஷ்யா வைத்துள்ளது. தரை,வான் என இரண்டு வழியில் தாக்குதலை உக்ரைன் எதிர்கொண்டுள்ளது. சமீபத்தில், நாட்டோ அமைப்புகளிடம் இருந்து அன்பளிப்பாக பெற்ற தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் இதர அதிநவீன ஆயுதங்கள் கொண்டு எதிராளிக்கு ஓரளவு பதிலடிக் கொடுக்கலாமே தவிர, ஆட்டத்தை மாற்றியமைக்காது.
தற்போது, உக்ரேனிய ராணுவம் வான்வழித் தாக்குதலில் சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ரஷ்யாவின் மேம்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் அடுத்தடுத்த நாட்களில் பதிலடித் தாக்குதலில் ஆதிக்கம் செலுத்தும். உக்ரைன் போர் விமானங்கள் இன்னும் பறந்து கொண்டிருப்பதாகவும், பல ரஷ்ய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பலரின் கணிப்புகளைத் தாண்டி,வானில் உக்ரைன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தனது வான்வழி ஏவுகணை ரஷ்யாவுக்கு மேலும் சில இழப்புகளை ஏற்படுத்தும் என்று அந்நாடு நம்புகிறது.
உக்ரைனின் கடற்படைப் பற்றி எதுவுமே சொல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது, எந்தவொரு கட்டத்திலும் அதனால் பெரியதொரு முக்கியத்துவம் ஏற்பட போவதில்லை.
உக்ரைனின் பலம், பலவீனம்:
ஆனால், இதுமட்டும் முழு கதையாகிவிடாது. ரஷ்யாவின் பலத்துடன் உக்ரைனியப் படைத் தளபதிகள் மோத விரும்பமாட்டார்கள். நவீன போர்க் கருவிகள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் கொண்டு மட்டும் ஓர் படையின் பலத்தை ஒருவரால் அளவிட முடியாது.
தார்மீகப் பண்பு (மனஉறுதி, அர்த்தப்பூர்வத் தொடர்பு, வெற்றிக்கான உந்துதல்), தத்துவார்த்த கருத்தாக்கம் (மூலோபாயம், புதுமை, இராணுவ கோட்பாடு") மற்றும் சாதனங்கள் (ஆயுதம்) ஆகிய மூன்று கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு படைகள் செயல்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து ராணுவம் அடிகோடிட்டு கூறுகிறது. துப்பாக்கி போன்ற போர்ச் சாதனங்கள் அதிகம் வைத்திருப்பது வேறு, வெற்றி என்பது வேறு. உக்ரேனியர்கள் ரஷ்யாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள். , அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் நீண்ட நெடிய போருக்கு அவர்கள் தயராகி வருகிறார்கள்.
தனது நாட்டுக்குள் அத்துமீறிய ரஷ்யாவின் செயல்பாடுகளால், ஒட்டுமொத்த உக்ரைனிய மக்களும் வேதனையும் கோபமும் அடைந்திருகின்றனர். அதிநவீன போர்க் கருவிகளை பயன்படுத்த தெரியா விட்டாலும், பெரும்பாலான மக்கள் கைத்துப்பாக்கிகளை ஏந்தக் கூடியவர்கள். தார்மீக ரீதியாகவும், நாட்டைப் பற்றிய நுணுக்கமான பார்வைகளைக் கொண்டிருப்பதாலும், ரஷ்யப் படைகளுக்கு சிறந்த பதிலடியை இவர்களால் கொடுக்க முடியும்.
உக்ரைன் அரசியல் வரலாற்றில்,கிளர்ச்சி யுத்தங்களுக்கு பஞ்சமில்லை. வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பகுதியினரிடையே, அரசியல் கட்டுப்பாட்டுக்காக பல்வேறு கிளர்ச்சிப் போராட்டங்கள் அங்கு கிளர்சிகள் வெடித்துள்ளன. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஏற்பட்ட பணிப் போர் காலத் தொடக்கத்தில் சோவியத் கருத்தியலுக்கு எதிரான மிகப்பெரிய மறைமுக கிளர்ச்சி ராணுவம் அங்கு செயல்பட்டது. பல்வேறு முனைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் படைத்தவர்களாக இவர்கள் இருந்தனர். தங்கள் போர் யுக்திகளால் ஆயிரக்கணக்கான ரஷ்யப் படைகளை இவர்கள் கொன்று குவித்தன.
ஏற்கனவே, ரஷ்யப் படைகள் உக்ரைன் நகரங்களுக்கு பெருமளவில் ஊடுருவியுள்ளன. போரின் இரண்டாவதுக் கட்டத்தை நோக்கி செல்வதற்கான ஊக்கத்தை அது இழந்திருக்கிறது. செச்சினிய விடுதலைப் போரின் போது சந்தித்த அதேவகையான சிக்கலை ரஷ்யா இப்போது சந்திக்க இருக்கிறது. நெடுங்காலம் நீடிக்கும் போரை உக்ரைன் அளிக்க இருக்கிறது. வரும் காலங்களில் இந்த போர் நாட்டின் முக்கிய நகர்ப் புறங்களில் தான் அரங்கேறும். நாட்டின் ஒரு அங்குல நிலத்திற்குக் கூட யாரும் சொந்தம் கொண்டாட விரும்பாத உக்ரைனிய மக்கள் கிளர்ச்சியாளராக உருவாகுவார்கள். இந்த கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டும்.
ஆங்காங்கே, கிளர்ச்சிப் போராடாங்கள் வெடிக்கும். ஆயுதம் தாங்கிய குடிமக்கள் அடங்கிய ஓர் சிறிய போராளிக் குழு ரஷ்யாவின் வழமையானப் படைகளை சிதறடிக்கும். இது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தூக்கத்தைக் கெடுக்கும்.
இந்த, கட்டுரை, Ukraine’s military is outgunned but can still inflict a great deal of pain on Russian forces என்ற தலைப்பில், theconversation என்ற டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இது,அந்த கட்டுரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும்.