மேலும் அறிய

பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?

TNEA Supplementary Counselling: துணைக் கலந்​தாய்​வில் பங்​கேற்க 15 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் துணைக் கலந்தாய்வு தேதி தள்ளிப்போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2025- 26ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கலந்தாய்வில் மூன்று சுற்றுகளும் அண்மையில் நடந்து முடிந்தன. மொத்தம் 423 கல்லூரிகள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றன.  

40 ஆயிரம் இடங்களுக்கு துணைக் கலந்தாய்வு

இந்த ஆண்டு மொத்தம் உள்ள 1,87,227 இடங்களில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் 26,719 இடங்களும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் 54,552 இடங்களும் நிரம்பி உள்ளன. தொடர்ந்து மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில் 51429 இடங்கள் நிரப்பப்பட்டன. இதன்மூலம் தற்போதுவரை மொத்தம் 1.40 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள சுமார் 40 ஆயிரம் இடங்களுக்கு துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முந்தைய கலந்தாய்வுகளில் அதிகபட்சமாக கணினி அறிவியல் சார்ந்த துறைகளில் அதிகபட்சமாக இடங்கள் நிரம்பி உள்ளன. அடுத்ததாக மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் (இசிஇ) அதிக இடங்களும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சார்ந்த துறைகளில் (இஇஇ) அடுத்தபடியாகவும் இடங்கள் நிரம்பி உள்ளன. குறைந்தபட்சமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் சார்ந்த துறைகளில் சொற்ப எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தன.

யாருக்கெல்லாம் துணைக் கலந்தாய்வு

மூன்று சுற்றுக் கலந்தாய்வு முடிந்த நிலையில், துணைக் கலந்தாய்வுக்கு நடைபெறுவது வழக்கம். துணைத் தேர்வுகளில் எழுதித் தேர்ச்சி பெற்றோருக்கும் முந்தைய கலந்தாய்வுகளில் இடம் கிடைக்காதவர்களும் இதில் கலந்துகொள்வர்.  

இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு முடிந்​து​விட்ட நிலை​யில் துணைக் கலந்​தாய்​வில் பங்​கேற்க 15 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். தற்​போது இந்த மாணவர்​களின் சான்​றிதழ்​கள் சரிபார்க்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. தொடர்ந்து தரவரிசைப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு, கலந்​தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது.

எனினும் சான்​றிதழ் சரி​பார்க்கும் பணி​கள் முடிவ​தில் கால​ தாமதம் ஏற்​படடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் துணைக் கலந்​தாய்வு திட்டமிட்ட தேதியில் இருந்து சிலநாட்​கள் தள்​ளிப்​ போகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் சுமார் 15 ஆயிரம் இடங்கள் காலி ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tneaonline.org/

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget