RCB: ”சோகத்தில் அமைதி” 3 மாதங்களுக்குப் பிறகு வெளியான ஆர்சிபி அணியின் உருக்கமான அறிக்கை
அன்பிற்கினிய 12th Man Army, இது எங்களின் இதயத்திலிருந்து உங்களுக்கு எழுதப்படும் கடிதம்! எங்கள் மௌனம், வெறுமையால் மட்டுமல்ல, சோகத்தாலும் நிறைந்த ஒரு தீவிரமான மௌனம் என்று பதிவிட்டுள்ளது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிக்கொண்டாத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்ப்பட்ட உயிரிழப்புக்கு எந்தவொரு பதிவுகளும் போடாமல் இருந்த அணி நிர்வாகம், சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு ஒரு அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.
முதல் பட்டம்:
ஜூன் 3 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் பட்டத்தை வென்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் பட்டத்திற்கான காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை தங்கள் ரசிகர்களுடன் கொண்டாட, பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய அந்த அணி திட்டமிட்டது. ஆனால், கொண்டாட்டங்கள் எதிர்பாராத சோகத்தை சந்தித்தன.
நெரிசல் சிக்கி 11 பேர் பலி
எதிரப்பாராத விதமாக இந்த கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், சுமார் 50 பேர் காயமடைந்தனர். மோசமான நிர்வாக நிகழ்வை நடத்தியதற்காக உலகம் முழுவதிலுமிருந்து விமர்சனங்களைப் பெற்ற ஆர்சிபி, கடுமையான விமர்சனங்கள், எஃப்ஐஆர் மற்றும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. அடுத்த மாதங்களுக்கு சமூக ஊடகங்களில் முழுமையான மௌனத்தை கடைப்பிடிக்க அணி முடிவு செய்து அமைதி காத்து வந்தது.
ஆர்சிபி பதிவு:
இந்த நிலையில் ஆர்சிபி அணி மூன்று மாத இடைவெளிக்கு பிறகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில்...
அன்பிற்கினிய 12th Man Army,
இது எங்களின் இதயத்திலிருந்து உங்களுக்கு எழுதப்படும் கடிதம்! எங்கள் மௌனம், வெறுமையால் மட்டுமல்ல, சோகத்தாலும் நிறைந்த ஒரு தீவிரமான மௌனம்.
இந்த ஊடகத்தின் மூலம், நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விஷயங்களையும் தருணங்களையும் பகிர்ந்து கொண்டோம். ஆனால் ஜூன் 4 ஆம் தேதி நடந்த சம்பவம் எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது. அதைத் தொடர்ந்து வந்த மௌனம் வெறும் மௌனம் அல்ல, பக்தி நிறைந்த அமைதியான அஞ்சலி. இந்த மௌனத்திற்குள் இருந்த வலியை உணர்ந்தபோது, நாங்கள் ஆழமாக யோசித்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்.
Dear 12th Man Army, this is our heartfelt letter to you!
— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 28, 2025
𝗜𝘁’𝘀 𝗯𝗲𝗲𝗻 𝗰𝗹𝗼𝘀𝗲 𝘁𝗼 𝘁𝗵𝗿𝗲𝗲 𝗺𝗼𝗻𝘁𝗵𝘀 𝘀𝗶𝗻𝗰𝗲 𝘄𝗲 𝗹𝗮𝘀𝘁 𝗽𝗼𝘀𝘁𝗲𝗱 𝗵𝗲𝗿𝗲.
The Silence wasn’t Absence. It was Grief.
This space was once filled with energy, memories and moments that you… pic.twitter.com/g0lOXAuYbd
வலியை பக்தியாகவும் நம்பிக்கையாகவும் மாற்ற முடிவு செய்தோம். இதன் விளைவாக ஆர்.சி.பி கேர்ஸ். எங்கள் ரசிகர்கள் மற்றும் சமூகத்திற்கான விசுவாசத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். இன்று நாங்கள் திரும்பி வந்துள்ளோம்; கர்நாடகாவின் பெருமையாக உங்களுடன் நிற்பதாக உறுதியளிக்கிறோம், முன்னேறுகிறோம். இது எங்கள் அக்கறை, எங்கள் உறுதிமொழி.
ஆர்.சி.பி கேர்ஸ்: நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் என்று ஆர்சிபி அணி பதிவிட்டுள்ளது.





















