உயர்கல்வி மாணவர் சேர்க்கை 77%; அசத்தும் அரசு- சாத்தியமானது எப்படி?
GER எனப்படும் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 47% என்பதிலிருந்து 100% ஆக உயர்த்துவதே பள்ளிக் கல்வித்துறையின் இலக்காகும்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை மேலும் தெரிவித்து உள்ளதாவது:
பள்ளிப் படிப்பை முடிக்கிற அனைத்து மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது தமிழ்நாடு அரசு. அதிலும் பின்தங்கிய சூழலில் இருந்து படிக்க வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கட்டாயம் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்காக பல்வேறு திட்டங்களும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.
இம்முயற்சிகளின் மூலம் GER எனப்படும் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 47% என்பதிலிருந்து 100% ஆக உயர்த்துவதே பள்ளிக் கல்வித்துறையின் இலக்காகும்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் மத்தியில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வை உண்டாக்க "உயர்கல்வி வழிகாட்டி" என்கிற புத்தகம் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்களைக் கொண்டு பாடமாகவே கற்பிக்கிறோம்.
* கடந்த ஆண்டு மட்டும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 6218 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்ற 15,70,919 மாணவர்கள் உயர்கல்வி வழிகாட்டல் பெற்றுள்ளனர்.
> 2022-23 ஆம் கல்வியாண்டில் 3,97,809 மாணவர்களில் 2,76,58&4 மாணவர்கள் என 70% அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கை அடைந்துள்ளனர்.
77% மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை
* 2023-24 ஆம் கல்வியாண்டில் 3,36,770 மாணவர்களில் 2,59,129 மாணவர்கள் என 77% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
* இதுவே இந்த அரசு நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம் மூலம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சான்றாக விளங்குகிறது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் 100% இலக்கினை அடையும் என்பதில் ஐயமில்லை.
* மாணவர்களின் உயர்கல்வியை உறுதிபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக கல்லூரி களப்பயணம் நிகழ்வில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 33,339 மாணவர்கள் 430 கல்லூரிகளுக்கும், 2023-2024 கல்வி ஆண்டில் 1,15,908 மாணவர்கள் 741 கல்லூரிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.
* இந்தக் கல்லூரி களப்பபண அனுபவம் மாணவர்களிடையே கல்லூரிகள் குறித்த அச்சத்தையும் சூழப்பங்களையும் அகற்றியதோடு, உயர்கல்வி குறித்த ஆர்வத்தையும் உண்டாக்கியது.
* இதன் நீட்சியாக நடப்பு கல்வியாண்டிலும் 'கல்லூரி களப்பயணம்' துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை 1,46,412 அரசுப் பள்ளி மாணவர்கள் 722 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை உயர் கல்வித்துறை ஒத்துழைப்புடன் கல்லூரிக் களப்பயணம் நிகழ்வில் கலந்துகொண்டு பார்வையிடவுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.






















