Gold Rate Peaks: தாங்காதுடா சாமி.! ஒரே நாளில் தட்டித் தூக்கிய தங்கம்; ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, ஒரு சவரன் தற்போது 76 ஆயிரம் ரூபாயை கடந்த புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில், தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வை கண்டு, ஒரு சவரன் 76 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய விலை நிலவரம் என்னவென்று பார்க்கலாம்.
தங்கத்தின் இன்றைய விலை என்ன.?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,470 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 75,760 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலையால், ஒரு சவரன் 76 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
அதன்படி, பிற்பகலில் கிராம் ஒன்றிற்கு மீண்டும் 65 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,535 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 76,280 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தொடர் உயர்வை கண்டுவரும் தங்கம் விலை
கடந்த 25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வருகிறது. 25-ம் தேதி, கிராம் 9,305 ரூபாயாகவும், சவரன் 74,440 ரூபாயாகவும் இருந்த தங்கத்தின் விலை, 26-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,355 ரூபாய்க்கும், ஒரு சவரன் 74,840 ரூபாய்க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, 27-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,390 ரூபாய்க்கும், ஒரு சவரன் 75 ஆயிரத்தை கடந்து, 75,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 28-ம் தேதியான நேற்று மேலும் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 9,405 ரூபாய்க்கும், ஒரு சவரன் 75,240 ரூபாய்க்கும் விற்பனையானது.
அதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் விலை உயர்ந்து, ஒரு சவரன் 76 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தங்கத்தின் விலை இப்படி தொடர்ந்து உயர்ந்தால், என்ன செய்வது என்று மக்கள் கவலையடைந்துள்ளனர்.
உச்சத்திலேயே இருக்கும் வெள்ளியின் விலை
வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்த நிலையில், அப்படியே உச்சத்திலேயே நிற்கிறது. கடந்த 25-ம் தேதி கிராம் 131 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 26-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து, கிராம் 130 ரூபாயாக இருந்தது. பின்னர் 28-ம் தேதி வரை அதே விலையில் நீடித்த நிலையில், இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, மீண்டும் உச்ச விலையை தொட்டுள்ளது.
அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 131 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.
தங்கம் விலை ஒரு நாளில் ஒரு முறை உயர்ந்தாலே தாங்காது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டும் முறை, அதிலும் சவரனுக்கு 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்ததால், பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.





















