லலித் மோடி, கிளார்க்கை பார்க்க அருவருப்பா இருக்கு.. மனித தன்மையற்ற செயல்.. ஸ்ரீசாந்த் மனைவி காட்டம்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் லலித் மோடியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ஸ்ரீசாந்த் அழுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் மட்டுமே வெளியானது. இந்நிலையில், இந்த வீடியோ காட்சியை தற்போது மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார்.
ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ குறித்து ஸ்ரீசாந்தின் மனைவி லலித் மோடியையும், மைக்கேல் கிளார்க்கையும் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து பல்வேறு முறை ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீசாந்தும் பலமுறை பேசியுள்ளார்.
லலித் மோடி, மைக்கேல் க்ளார்க், உங்கள் இருவரையும் பார்க்க அருவருப்பாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் மீண்டும் இழுப்பதை பார்க்கும்போது நீங்கள் மனிதர்களே அல்ல. இது இதயமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற செயல். ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் என இருவரும் அதிலிருந்து கடந்து தங்களது சொந்த வாழ்வில் கவனம் செலுத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.






















