Nestle CEO: பெண் ஊழியருடன் காதலும், காமமும் - மேலும் ஒரு சிஇஒ காலி, நெஸ்லே எடுத்த அதிரடி முடிவு
Nestle CEO: நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Nestle CEO: சர்வதேச சந்தையில் உணவுத்துறை சந்தையில் மிகப்பெரிய நிறுவனமான நெஸ்லேவின், தலைமை செயல் அதிகாரியான லாரெண்ட் ஃப்ரீக்ஸ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெஸ்லே சிஇஒ நீக்கம்:
சுவிட்சர்லாந்தை சேர்ந்த உணவு நிறுவனமான நெஸ்லேவின் தலைமை செயல் அதிகாரியான லாரன் ஃப்ரீக்ஸ், தனது சக ஊழியருடன் உறவில் இருந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதன் கிளை நிறுவனமான நெஸ்பிரெஸ்ஸோவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பிலிப் நவ்ரத்தில் குழுமத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக போர்ட் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனம் தான், மிகவும் பிரபலமான நெஸ்பிரெஸ்ஸோ காஃபி கேப்சூல்ஸ், கிட்கேட் சாக்லேட் போன்ற, பல பிரபலமான உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
பெண் ஊழியருடன் உறவு
நெஸ்லேவின் வணிக நடத்தை விதிகளை மீறிய நேரடி துணை அதிகாரியுடனான வெளிப்படுத்தப்படாத காதல் உறவு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து லாரன்ட் ஃப்ரீக்ஸ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பால் புல்கே மற்றும் முன்னண இயக்குனரான பாப்லோ இஸ்லா ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்ட விசாரணைக்கு, வெளிப்புற ஆலோசகரின் ஆதரவுடன் உத்தரவிட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.
"ஃப்ரீக்ஸின் பணிநீக்கம் ஒரு அவசியமான முடிவு. நெஸ்லேவின் மதிப்புகளும் நிர்வாகமும் எங்கள் நிறுவனத்தின் வலுவான அடித்தளமாகும். அவரின் பல வருட சேவைக்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று புல்கே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யார் இந்த லாரண்ட் ஃப்ரீக்ஸ்?
நெஸ்லே நிறுவனத்தின் அனுபவமுள்ள பணியாளர்களில் ஒருவரான ஃப்ரீக்ஸ், 1986 இல் பிரான்சில் உள்ள பிரிவில் பணிக்கு சேர்ந்தார். 2008 இல் தொடங்கிய சப் பிரைம் மற்றும் யூரோ நெருக்கடிகளின் போது நிறுவனத்தின் ஐரோப்பிய செயல்பாடுகளை 2014 வரை அவர் நடத்தினார். தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு அவர் லத்தீன் அமெரிக்கப் பிரிவிற்குத் தலைமை தாங்கினார். செப்டம்பர் 2024 இல் தலைமை செயலாளர் பதவியை ஏற்றபிறகு நெஸ்லே நிறுவனம் ஒருமுறை தான் முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டு நெஸ்லேவின் பங்கு விலை கிட்டத்தட்ட கால் பகுதி சரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு சிஇஒ காலி
அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்ட்ரோனாமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆண்டி பைரன், தனது சக ஊழியருடன் பொதுவெளியில் சுற்றித் திரிந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அவர்கள் இருவரும் தகாத உறவில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வெடித்த சர்ச்சையால், ஆன்டி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் சக பெண் ஊழியருடன் உறவில் இருந்ததாக, நெஸ்லே நிறுவன தலைமை செயல் அதிகாரியும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.





















