Asia Cup 2025: ஆசிய கோப்பை - இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கான நேரத்தில் மாற்றம் - எப்போது? என்ன காரணம்?
Asia Cup 2025: ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Asia Cup 2025: ஆசிய கோப்பையில் சில போட்டிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை காட்டிலும், 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பையில் மாற்றம்:
ஆசிய கோப்பைக்கான 2025 அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, அனைத்து இரவு நேர போட்டிகளும் இப்போது ஏற்கனவே திட்டமிட்டதை காட்டிலும் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலவும் கடுமையான வெப்ப நிலைமைகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
19 போட்டிகளில் ஒன்று மட்டுமே பகல் நேர போட்டியாக திட்டமிடப்பட்டிருந்தாலும், அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நேரப்படி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. போட்டியின் போது வீரர்களின் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர்களின் வசதி ஆகிய இரண்டும் முன்னுரிமையாக இருப்பதை உறுதிசெய்து, ஒளிபரப்பாளர்களுடன் கலந்தாலோசித்து, மாலை நேர ஆட்டங்களுக்கான திருத்தப்பட்ட நேரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன என எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை 2025 - புதுப்பிக்கப்பட்ட அட்டவணை:
- செப்டம்பர் 9 – ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் – ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 10 – இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 11 – வங்கதேசம் vs ஹாங்காங் – ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 12 – பாகிஸ்தான் vs ஓமன் – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 13 – வங்கதேசம் vs இலங்கை – ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 14 – இந்தியா vs பாகிஸ்தான் – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 15 – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs ஓமன் – ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி – மாலை 5:30 IST
- செப்டம்பர் 15 – இலங்கை vs ஹாங்காங் – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 16 – வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் – ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 17 – பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 18 – இலங்கை vs ஆப்கானிஸ்தான் – ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 19 – இந்தியா vs ஓமன் – ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 20 – குரூப் B Q1 vs குரூப் B Q2 – துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 21 – குரூப் A Q1 vs குரூப் A Q2 – துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 22 – ஓய்வு நாள்
- செப்டம்பர் 23 – குரூப் A Q2 vs குரூப் B Q1 – ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 24 – குரூப் A Q1 vs குரூப் B Q2 – துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 25 – குரூப் A Q2 vs குரூப் B Q2 – துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 26 – குரூப் A Q1 vs குரூப் B Q1 – துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – இரவு 8 மணி IST
- செப்டம்பர் 28 – ஆசிய கோப்பை இறுதி – துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – இரவு 8 மணி IST
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி
சூர்ய குமார் யாதவ் (கே), சுப்மான் கில் (து.கே.,), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (WK), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் சம்சுன் யாதவ்
காத்திருப்பு வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரல்



















