Cheapest Electric SUV: இனி இதுதான் மலிவு விலை மின்சார எஸ்யுவி.. அலறப்போகும் இந்திய சந்தை, மிரட்டும் சீனா கார்
BYD Atto 2 EV SUV: சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் தனது மலிவு விலை மின்சார காரை விரைவில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

BYD Atto 2 EV SUV: சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் தனது மலிவு விலை மின்சார காரான Atto 2 மாடலை விரைவில் சந்தைப்படுத்த உள்ளது.
BYD-யின் மலிவான மின்சார கார்:
சர்வதேச சந்தையில் மின்சார கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ள சீனாவைச் சேர்ந்த BYD, இந்திய சந்தையில் தற்போது 4 கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் eMAX 7, Atto 3, Seal மற்றும் Sealion 7 ஆகியவை அடங்கும். இந்நிலையில் தான், உள்ளூர் சந்தையில் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் வகையில், சர்வதேச சந்தையில் தனது மலிவு விலை மின்சார காராக உள்ள Atto 2 மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த BYD திட்டமிட்டுள்ளது.
BYD Atto 2 - வெளிப்புற அம்சங்கள்
சர்வதேச சந்தையில் Atto 2 கார் மாடலானது ஹைகிங் க்ரீன், க்ளைம்பிங் க்ரே மற்றும் ஸ்கிங் வைட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 4,310 மில்லி மீட்டர் நீளம், 1,830 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1,675 மில்லி மீட்டர் உயரம் கொண்டுள்ளது. 2,620 மில்லி மீட்டர் நீளத்திலான வீல் பேஸையும், 165 மில்லி மீட்டர் உயரமான க்ரவுண்ட் க்ளியரன்ஸையும் பெற்றுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகள், ஸ்கல்ப்டட் பம்பர்கள், ஏரோ ஆப்டிமைஸ்ட் வீல் டிசைன்கள், ஃப்ளாப் ஸ்டைல் டோர் ஹேண்டில்ஸ், பின்புறத்தில் லைட் ஸ்ட்ரிப் உடன் இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் ரியர் ரூஃப் ஸ்பாய்லர்கள் ஆகியவையும் கவனத்தை ஈர்க்கின்றன.
BYD Atto 2 - உட்புற அம்சங்கள்
BYD நிறுவனத்தின் மற்ற மின்சார வாகனங்களைப் போலவே Atto 2 கார் மாடலிலும், 15.6 இன்ச் ரொடேடிங் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூடுதலாக பனோரமிக் சன்ரூஃப், மல்டிபிள் யுஎஸ்பி போர்ட்ஸ், கனெக்டட் கார் ஃபியூட்சர்ஸ், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியண்ட் லைட்டிங், மல்டிபிள் ஏர்பேக்ஸ், ADAS தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், ஏராளமான பாதுகாப்பு அம்சங்களால், பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
BYD Atto 2 - பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்:
சர்வதேச சந்தையில் BYD Atto 2 கார் மாடலானது 45.1KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டு, 175hp மற்றும் 290Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7.9 விநாடிகளில் எட்டும் ஆற்றலை கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்த எஸ்யுவி ஆனது 65KW வரையிலான டிசி ஃபாஸ்ட் சார்ஜரை அனுமதிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 80 சதவிகிதம் வரையிலான சார்ஜிங்கை வெறும் 35 முதல் 40 நிமிடங்களில் எட்ட முடியும். 11KW வரையிலான ஏசி சார்ஜர் மூலம் 5.5 மணி நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
BYD Atto 2 - வெளியீடு, விலை, போட்டியாளர்கள்:
அண்மையில் இந்திய சாலையில் காணக்கிடைத்ததன் மூலம் BYD-யின் Atto 2 கார் மாடல் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லாவிட்டாலும், நடப்பாண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காம்பேக்ட் மின்சார எஸ்யுவி பிரிவில் BYD Atto 2 மாடலானது, ஹுண்டாய் க்ரேட்டா, டாடா கர்வ் மற்றும் MG ZS ஆகிய மின்சார கார்களிடம் இருந்து போட்டியை எதிர்கொள்கிறது. இதுபோக உள்நாட்டு சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள மாருதி e-விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூசர் மாடல்களும் போட்டியாக விளங்கக் கூடும். இதன் விலை 18 முதல் 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். BYD நிறுவனம் சார்பில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் மலிவு விலை காராக Atto 2 இருக்கும் என கூறப்படுகிறது.






















