'சிம்மத்தில் வரப்போகும் புதன்' பண மழை - கன்னி To மீனம் வரை
சிம்ம புதன் உங்கள் ராசிக்கு என்ன செய்யப் போகிறார்...

கன்னி ராசி...
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே பத்தாம் வீட்டு அதிபதியை 12ஆம் வீட்டில் செல்வதால் சுலபமாக முடிக்க வேண்டிய வேலைகளில் சில சிக்கல்கள் ஏற்படலாம் ஆனால் அது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு சற்று ஓய்வு தேவை தான் ஆனால் ஓய்வு எடுத்தால் உடல்நலையில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் இருக்கலாம் 12 ஆம் கழுத்தில் இருக்கும் எதுவும் சரியாக உங்களை தூங்கவிடாமல் அலைச்சல் என்ற நிலையிலேயே வைத்திருப்பார் இதை புதன் ஓரளவுக்கு சிம்மத்தில் வந்து சமாளிப்பார் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் உதவிகள் தேடி வரும் காலம்...
துலாம் ராசி...
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே லாப ஸ்தானத்தில் புதன் அமர்வது எவ்வளவு கடினமான முடிவுகள் எடுக்க வேண்டி வந்தாலும் உங்களால் சுலபமாக அதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க முடியும் பயணங்களால் ஆதாயம் உண்டு இறைவனுடைய அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும் குருமார்களின் ஆசிர்வாதம் உண்டு பல தடையால் நீண்ட நாட்களாக சிரமப்பட்டு இருந்த உங்களுக்கு சிரமங்கள் நீங்கி சிறப்பான வாழ்வு உண்டு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்...
விருச்சிக ராசி...
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே , தொழில் ரீதியான சிக்கல்களில் சிலர் சிக்கி இருக்கக்கூடும் இப்படியான சூழ்நிலையில் இதோ புதன் சிம்மத்தில் அமரும்போது வேலை மாறுதல் இடம் மாறுதல் போன்றவை உங்களுக்கு சாதகமாக அமையும் நீங்கள் இருக்கும் இடம் அல்லது தொழில் சம்பந்தமாக ஒரு சிலர் உங்களுக்கு இடையூறாக அமையலாம் அல்லது நிறுவனமே உங்களுக்கு எதிராக செயல்படலாம் கவலை வேண்டாம் பிரச்சனைகள் தீரும் காலகட்டம் வந்துவிட்டது வீடு வாகனம் நிலம் போன்றவை இழுபறியாக இருந்தால் சாதகமாக முடியும் காலகட்டம் கிட்டத்தட்ட நல்ல முன்னேற்ற பாதை உங்களுக்கு தெரியப்போகிறது...
தனுசு ராசி...
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு புதன் ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார் இதனால் வரையில் சரியாக யாரிடமும் பேசாமல் மன கஷ்டங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு சிரமப்பட்டு இருப்பீர்கள் யாரும் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் இருந்திருக்கலாம் கவலை வேண்டாம் விலகி அவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள் எதிர்பார்த்த பணம் தானாக கைக்கு வரும்... உண்மையாகவே தனுசுக்கு இது ஒரு சிறப்பான காலகட்டம் ஒரு தொழிலுக்கு இரண்டு தொழில் பார்க்க வாய்ப்புண்டு உயர் அதிகாரிகளே உங்களுக்கு சாதகமாக சில காரியங்களை முடித்து கொடுப்பார்கள் பொருளாதார வசதி மேம்படும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும் தகப்பனாரின் அன்பை பெறுவீர்கள் தெய்வம் அனுகூலம் உண்டு...
மகர ராசி...
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே ராசி எட்டில் புதன் மறைவது நல்லது... மகரத்திற்கு ஆறாம் அதிபதி புதன் எட்டில் மறையும் பொழுது நோய்கள் நம்மை விட்டு விலகும் கடன் தொல்லை அவளும் பணம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் சற்று விலகி நிற்பார்கள் மறைவு ஸ்தானங்களில் தொந்தரவு நோய் தொந்தரவு இருப்பவர்கள் மருத்துவமனைக்கு சென்று உடல் ஆரோக்கியத்தை காப்பீர்கள் மறைவு தன லாபம் உண்டு திடீர் அதிர்ஷ்டம் யோகம் ஏற்படும்....
கும்ப ராசி :
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே ஏழில் புதன் வருவது சிறப்பு பிள்ளைகளால் நன்மை உண்டு நீண்ட நாட்களாக வழக்கு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஒரு தீர்வு காணோம் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும் வீட்டில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவீர்கள் அதிர்ஷ்டம் தன லாபம் உண்டாகும் வாழ்க்கை துணை குறித்தான புரிதல்கள் ஏற்படும் வாழ்க்கை துணை உடன் சிக்கலில் இருப்பவர்கள் சற்று நிதானமாக அவர்களை புரிந்து கொள்வதற்கான ஏற்ற நேரம்...
மீன ராசி...
அன்பான மீனராசி வாசகர்களே ஏழுக்குடையவர் ஆறில் செல்கிறார் தொந்தரவில்லை யாரை சந்திக்க செல்கிறார்களோ அவராகவே உங்களை சந்திக்க வந்து விடுவார் நிலம் இடம் வீடு தொடர்பாக சில மாற்றங்களை செய்ய வாய்ப்புண்டு யாரிடமும் பெரிதாக கோவப்பட வேண்டாம் தன வரவு உண்டு வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள் சிம்மத்தில் இருக்கும் புதன் உங்களின் அறிவாற்றலை பெருக்குவார் நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு அதற்கான காரணம் தெரியவந்து முழு குணமடைய வாய்ப்பு உண்டு….






















