மேலும் அறிய

விளையாட்டு வீரர்களே... உங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு: முழுமையான விபரங்கள் இதோ!!!

3 சதவீத இடஒதுக்கீட்டில் கீழ் விண்ணப்பிக்க தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. யாருக்கு தெரியுங்களா? விளையாட்டு வீரர்களுக்குதான். 3 சதவீத இடஒதுக்கீடு... ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம். இதற்கு என்ன தகுதிகள் என்று தெரிஞ்சுக்கிட்டு உடனே உங்க விண்ணப்பத்தை தட்டி விடுங்க. வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

தமிழ்நாட்டில் அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு கீழ் அரசு வேலை பெற விரும்பும் வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பணியில் 3 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு 2025-ம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு விளையாட்டுகளில் பதக்கம் வெற்று சாதனைப் படைத்த வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்னென்ன மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்று முழு விபரங்கள் இதோ உங்களுக்காக.

தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், சர்வதேச அளவிலான போட்டிகள், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 3% விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பெறப்படுகிறது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

3 சதவீத இடஒதுக்கீட்டில் கீழ் விண்ணப்பிக்க தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறைக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பதவிக்கு ஏற்ப அனைத்து குறைந்தபட்ச கல்வித்தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.  மேலும், வீரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பாரா - தடகள வீரர்களுக்கான வயது வரம்பு 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

எந்தெந்த போட்டிகளில் பங்கேற்றவர்களாக இருக்கணும்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், IOC மூலம் அங்கீகரிக்கப்பட்ட ISF கீழ் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள், IOC மூலம் அங்கீகரிக்கப்பட்ட ISF கீழ் 4 அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள் ஆகியவற்றில் வெற்றிபெற்றவர்களாகவோ அல்லது பங்கேற்றவர்களாகவோ இருக்க வேண்டும்.

தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களாக மட்டும் இருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SADT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

சரிங்க எப்படி விண்ணப்பம் செய்வது

தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பிற்கு https://sdat.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் தொடங்கப்பட்ட நிலையில் வரும் செப்டம்பர் 24-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேல் குறிப்பிட்டுள்ள போட்டிகளில் பங்கேற்று, 3 சதவீத இடஒதுக்கீட்டில் தமிழக அரசு வேலைக்கு தகுதிபெற்ற விளையாட்டு வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Embed widget