உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
IB Recruitment 2025: உளவுத்துறைக்கு விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஊதியம் அளிக்கப்படும்.

ஐபி எனப்படும் புலனாய்வுப் பணியகம் (IB) பாதுகாப்பு உதவியாளர் (SA)/ நிர்வாகி ஆட்சேர்ப்பு 2025ஆம் ஆண்டுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆகஸ்ட் 17) கடைசித் தேதி ஆகும். இதன் மூலம் மொத்தம் 4987 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த 4987 காலி இடங்களில் சென்னையில் 285 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஹைதராபாத்தில் 117 இடங்களும் திருவனந்தபுரத்தில் 334 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆகஸ்ட் 17, 2025 நிலவரப்படி விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 27 ஆண்டுகள் வரையில் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு பொருந்தும்.
ஊதியம் எவ்வளவு?
ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஊதியம் அளிக்கப்படும்.
தேர்வு முறை
- ஆன்லைன் தேர்வு
- எழுத்து தேர்வு (விவரித்து எழுதும் வகை)
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பு
தேர்வு மையங்கள் எங்கே?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
-
பொது, ஓபிசி பிரிவினர்: ரூ. 650
-
பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி தேர்வர்கள்: ரூ.550
ஆன்லைன் மூலமே கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
-
உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமானgov.in ஐ க்ளிக் செய்யவும்.
-
திரையில் தோன்றும் IB Recruitment என்ற லிங்கை கிளிக் செய்யவும்
-
தேவையான தகவல்களை உள்ளிட்டு ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
-
அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையெழுத்து, தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்யுங்கள்
-
விண்ணப்பக் கட்டணம் செலுத்தி சப்மிட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
-
வேலை தொடர்பான அறிவிக்கையைக் காண: https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/1/4001117795.pdf
உதவி எண்: 022- 61087512






















